JEE Main 2025 Registration: ஜனவரி அமர்வுத் தேர்வுக்கான ஜே.இ.இ முதன்மை தேர்வு 2025 விண்ணப்ப பதிவு நவம்பர் 22 அன்று முடிவடையும் என தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jeemain.nta.nic.in) இரவு 9 மணிக்குள் பதிவு செய்துக் கொள்ளலாம். கட்டணம் செலுத்தும் சாளரம் இரவு 11:50 மணிக்கு வரை செயல்படும்.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2025 Registration: Last date to apply for January session exam on November 22
ஜே.இ.இ முதன்மை தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 22 மற்றும் 31 க்கு இடையில் நடைபெறும். ஜே.இ.இ மெயின் தேர்வின் இரண்டு அமர்வுகளையும் ஒரு மாணவர் எழுத வேண்டிய அவசியமில்லை. தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பித்து ஜே.இ.இ முதன்மை தேர்வு ஏப்ரல் 2025 அமர்வில் பங்கேற்கலாம். தகுதியை கருத்தில் கொள்ளும் போது இரண்டு மதிப்பெண்களில் அதிக மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஜே.இ.இ முதன்மை தேர்வுப் பதிவு 2025: விண்ணப்ப படிகள்
படி 1: jeemain.nta.nic.in என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
படி 2: ஜே.இ.இ முதன்மை அமர்வு 1 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: அடுத்த சாளரத்தில், தொடர்பு விவரங்கள் மற்றும் பிற தகவல்களை உள்ளிடவும்.
படி 4: பதிவு படிவத்தை நிரப்பவும்
படி 5: புகைப்படங்கள், கையொப்பங்களைப் பதிவேற்றவும்
படி 6: ஜே.இ.இ முதன்மை விண்ணப்பப் படிவம் 2025 ஐச் சமர்ப்பித்து, உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்
ஜே.இ.இ முதன்மை தேர்வு விண்ணப்பப் பதிவு 2025 சாளரம் மூடப்பட்ட பிறகு, தேசிய தேர்வு முகமை விண்ணப்பத் திருத்தச் சாளரத்தை நவம்பர் 26 அன்று திறக்கும். விண்ணப்பத் திருத்தச் சாளரம் நவம்பர் 27 அன்று மூடப்படும். விண்ணப்பப் படிவங்களில் திருத்தங்களைச் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைவதன் மூலம் திருத்தங்களைச் செய்ய முடியும். இருப்பினும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் மாற்ற முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“