/indian-express-tamil/media/media_files/2025/10/30/jee-main-2026-2025-10-30-16-43-35.jpg)
JEE Main 2026: 'அதிகம் படிப்பது பயனில்லை'.. புத்திசாலித்தனமாகத் தயாராவது எப்படி?
ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு (JEE Main 2026) தயாராகும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, இது பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பொருட்கள் மற்றும் தேர்வுகள் ஆகியவற்றில் செலவிடும் நேரமாகவே இருக்கும். ஆனா, முதல்நிலை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு, அவர்கள் படிக்கும் நேரத்தால் மட்டுமல்ல, மாறாகத் தங்களைத் தாங்களே மதிப்பிட்டு, மாற்றியமைத்து, முன்னேறும் திறனில்தான் உள்ளது. இன்றைய போட்டி நிறைந்த கற்றல் சூழலில், தேர்வுக்குத் தயாராவதில் இந்த 'மதிப்பீட்டு நுண்ணறிவே' (Assessment Intelligence) உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது.
பயிற்சி மையங்கள் (Coaching) சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான கட்டமைப்பை வழங்கினாலும், ஒவ்வொரு மாணவரும் ஒரே மாதிரியாகக் கற்றுக்கொள்வதுமில்லை, ஒரே மாதிரியான தவறுகளைச் செய்வதுமில்லை. பயிற்சி மையங்கள் அறிவை வழங்குகின்றன; ஆனால், மதிப்பீடு என்பது மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்த தெளிவான பார்வையை வழங்குகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஒவ்வொரு ஆண்டும் ஜே.இ.இ. தேர்வு, கருத்தியல் டெப்த் மற்றும் பகுப்பாய்வு கேள்விகளை அறிமுகப்படுத்தி மாறி வருவதால், மாணவர்களுக்குச் சரியான பதில்கள் மற்றும் தவறான பதில்களுக்கு அப்பால், தொடர்ச்சியான பீட்பேக் (Continuous Feedback Loops) தேவைப்படுகின்றன. இங்கே தான் மதிப்பீட்டு நுண்ணறிவு முக்கியப் பங்கை வகிக்கிறது. இது மாணவர்கள் ஏன் தவறு செய்தார்கள், எந்தப் பகுதிகளைத் தவறவிட்டார்கள், மற்றும் தங்கள் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
மதிப்பீட்டு நுண்ணறிவு என்றால் என்ன?
மதிப்பீட்டு நுண்ணறிவு என்பது, தகவல்களையும் (Data) சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் சோதனைகளையும் (Adaptive Testing) பயன்படுத்தி, தேர்வுகளைத் தனிப்பட்டதாகவும் துல்லியமாகவும் மாற்றுவதாகும். இது வெறுமனே நினைவாற்றலை மட்டும் அளவிடாமல், ஒரு மாணவரின் அணுகுமுறை, வேகம், துல்லியம் மற்றும் கருத்தியல் பலம் ஆகியவற்றையும் அளவிடுகிறது. தவறுகள் மற்றும் நேரப் பயன்பாட்டில் உள்ள வடிவங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம், மாணவர்கள் எங்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமோ, அங்கு கவனம் செலுத்த உதவுகிறது.
ஜே.இ.இ. மெயின்ஸ் 2026-க்கு புத்திசாலித்தனமாகத் தயாராவது எப்படி?
2026 ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வானது, கடந்த ஆண்டுகளை விட மேலும் அதிகமாக பகுப்பாய்வு மற்றும் கருத்தியல் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும். போட்டி அதிகரித்திருந்தாலும், மாணவர்களுக்கு கிடைக்கும் அமைப்பு சார்ந்த கருவிகளும் அதிகரித்துள்ளன. புத்திசாலித்தனமான மதிப்பீட்டு அமைப்பு, தேர்வர்களுக்குத் தங்கள் மதிப்பெண்களில் 80% ஈட்டும் 20% முக்கியக் கருத்துக்களை அடையாளம் காண அனுமதிக்கும். இந்தக் குறிப்பிட்ட இலக்கு அணுகுமுறை, நேரத்தைச் சேமிப்பதுடன், தேர்வில் முக்கியமான தங்கள் திறன்கள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையையும் அளிக்கிறது.
கருத்தியல் அடித்தளத்தை உருவாக்கப் பயிற்சி மையங்கள் உதவலாம். ஆனால், கற்றலில் இருந்து தேர்ச்சிக்கு மாறுவது என்பது ஒருவர் தங்கள் கற்றலை எவ்வாறு மதிப்பிட்டு மேம்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தது. இந்த மாற்றத்தில் மதிப்பீட்டு நுண்ணறிவு வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது. அதாவது, கற்றல் என்பது தேர்வுக்குத் தயாராவதாகவும், அந்தத் தயாரிப்பு என்பது சிறப்படைவதற்கான ஆதாரபூர்வமான முயற்சியாகவும் மாறும்.
ஜே.இ.இ. 2026 தேர்வை எதிர்கொள்ளும்போது, மிக அதிகம் படித்தவர்களுக்கோ அல்லது அதிக அறிவுள்ளவர்களுக்கோ அனுகூலம் இருக்காது. மதிப்பீட்டு நுண்ணறிவின் உதவியுடன், அந்த செயல்முறையின் மூலம் தங்களைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us