Advertisment

நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளுக்கு அட்மிட் கார்டு எப்போது? என்.டி.ஏ அறிவிப்பு

nta neet admit card 2020 : இந்தியா முழுவதும் ஜூலை 26 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். அதற்கான அட்மிட் கார்டு 15 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JEE Main, NEET, jee main exam date, neet 2020 exam date, college admission, HRD minister live interaction, ramesh pokhriyal nishank, nta news, national testing agency, education news, நீட் தேர்வு, ஜேஇஇ, கல்வி, வேலைவாய்ப்பு

jee main admit card 2020 : ஒருங்கினைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஆகிய தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ)  முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

Advertisment

கொரோனா பொது முடக்கத்தால் ஜே.இ.இ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நிலுவையில் உள்ள நுழைவுத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளை கடந்த மே 5ம் தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவித்தார். அதில், நீட் தேர்வு 26 ஜுலை 2020இல் நடைபெறும் என்றும் அதே போன்று ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜுலை மாதம் 18, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் ஜூலை 26 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள், ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை இரண்டு அமர்வுகளாக நடைபெறும். காலை அமர்வு காலை 9 மணி முதல் நண்பகல் வரையிலும், மதியம் அமர்வு பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

இந்நிலையில்,தேசிய தேர்வு முகமை வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், 15 நாட்களுக்கு முன்னதாக அந்தந்த தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம், நீட்  தேர்வுக்கான அட்மிட் கார்டு ஜூலை 11 (அ) ஜூலை இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படளாம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.  ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கான அட்மிட் கார்டு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த இரண்டு நுழைவுத் தேர்வுகளுக்கான,  முடிவுகள் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும். ஜே.இ.இ பிராதனத் தேர்வு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.ஜே.இ.இ முதன்மை தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் மட்டுமே பிராதன தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்பதால், முதன்மைத் தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment