ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.
இதில் முதல்நிலைத் தேர்வானது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஜேஇஇ தேர்வில் நாடு முழுவதும் 925 மையங்களில் 4.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகளுடன் சேர்த்து, ஜே.இ.இ.அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கட்ஆஃப் மார்க்கும் வெளியாகியுள்ளது. விவரங்கள் பின்வருமாறு.
பிரிவு வகை - கட்ஆஃப் மார்க்
பொது பிரிவு- 87.8992241
பொது பிரிவில் EWS சப் வகை - 66.2214845
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (OBC-NCL) - 68.0234447
எஸ்சி - 46.8825338
எஸ்.டி - 34.6728999
பிடபிள்யூடி PwD - 0.0096375
ஜேஇஇ தேர்வின் கட்ஆஃப் மார்க் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு குறைந்துள்ளது. பொது பிரிவினருக்கான கட்ஆஃப் மார்க் கடந்த ஆண்டு 90.3765335 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்நிலைத் தேர்வில் முதல் இரண்டரை லட்சம் இடங்களை பிடித்த மாணவர்கள் ஐஐடி சேர்க்கைக்கான மீண்டும் அட்வான்ஸ்ட் தேர்வை எழுதவுள்ளனர். ஜே.இ.இ.அட்வான்ஸ் தேர்வு அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”