இந்தியாவில் ஒருங்கிணைந்த பொறியியல் முதன்மை நுழைவுத் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. கோவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தேர்வுக்காக, தேசிய சோதனை முகமை (என்.டி.ஏ) 10 லட்சம் முகக்கவச உறைகள், 10 லட்சம் ஜோடி கையுறைகள், 1,300 அகச்சிவப்புக் கதிர் தெர்மோமீட்டர் கருவிகள், 6,600 லிட்டர் சானிடைசர் மற்றும் திரவ கிருமிநாசினிகள், 3,300 துப்புரவு ஊழியர்கள் என 13 கோடி ரூபாய் கூடுதல் செலவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 570 லிருந்து 660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1,2,3,4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தத் தேர்வு ஒருநாளில் 2 ஷிப்டுகளில் நடத்தப்படுகிறது. முதல் ஷிப்ட் 9:30 மணி முதல் மதியம் 12:30 மணிவரையிலும், 2-வது ஷிப்ட் பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரையிலும் நடைபெறும்.
நாக்பூர் பெஞ்ச் மிக முக்கிய தீர்ப்பு
இன்று முக்கிய அறிவிப்பாக, தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் மிக முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாமதமாக அல்லது தேர்வு மையத்தை அடைய முடியாத சூழல் இருந்தால் அவர்கள் தேசிய சோதனை முகமையை (என்.டி.ஏ) அணுகலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. மாணவர்களின் கோரிக்கைகளை சரிபார்த்து, 15 நாட்களுக்குள் என்.டி.ஏ. முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீட், ஜேஇஇ தேர்வர்களுக்கு போக்குவரத்து வசதி: ஐஐடி மாணவர்கள் உதவி
சிறப்பு ரயில்களில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்: மும்பை
ஜேஇஇ, நீட் தேர்வர்கள் மும்பை சிறப்பு புறநகர் சிறப்பு ரயில் சேவைகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். புறநகர் ரயில் நிலையங்களில் உள்ளே நுழையும் போதும் மாணவர்கள் தங்கள் அட்மிட் கார்டை காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
JEE & NEET aspirants will be allowed to travel by special suburban services in Mumbai.
The Admit Card of candidates will be considered as authority to enter suburban stations with companions
(parents/guardians) & purchase travel tickets.#JEEMain #NEET2020 #JEENEET pic.twitter.com/oJtPzoFody
— Western Railway (@WesternRly) September 1, 2020
போக்குவரத்து வசதிகள் இல்லை - பீகார் மாணவர்கள் குற்றச்சாட்டு:
தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை என்று பீகாரைச் சேர்ந்த பியுஷ் என்ற மாணவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Bihar: Candidates undergo temperature check & hand sanitization process at TCS Office in Pataliputra Colony, Patna, designated as an exam centre for #JEEMain. They are also being given fresh masks.
A candidate, Piyush says, "There were no autos/buses available to reach here." pic.twitter.com/uBLrOfOxXR
— ANI (@ANI) September 1, 2020
ஜம்மு- காஷ்மீர் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு நுழையும் காட்சி
Jammu & Kashmir: Candidates arrive at Chenab College of Education in Kaluchak that has been designated as an exam centre for #JEEMain.
A candidate says, "Today we have the exam of B. Architecture, therefore there are fewer students. It's good that the exam is being conducted." pic.twitter.com/9fK9AvSdFI
— ANI (@ANI) September 1, 2020
கேரளா: மாணவர்களின் வெப்பநிலை சரிபார்க்கப்படுகிறது
Kerala: Sanitisation facility installed and temperature of candidates being checked before entering an examination centre in Kochi's Aluva, for #JEEMains exam, earlier today. pic.twitter.com/uYWSaL5tNj
— ANI (@ANI) September 1, 2020
தேர்வு அறைக்குள் நுழைவது எப்படி?
படி 1: பதிவு அறை நுழைவு வாயிலில், மாணவர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும் ;
படி 2 : வெப்பநிலை அளவு (<37.4 ° C / 99.4 ° F) என்று இருந்தால், வழக்கமான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்;
படி 3 : வெப்பநிலை (> 37.4 ° C / 99.4 ° F) என்று இருந்தால், தனிஅறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு வெப்ப நிலை இயல்புக்கு திரும்பவில்லையென்றால், தனிமைப்படுத்தும் அறைக்கு அழைத்து சென்று தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்;
படி 4 : மாணவர்கள் தங்களது அட்மிட் கார்டு, செல்லுபடியாகும் ஏதேனும் ஒரு அரசு அடையாளச் சான்று, மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் (பி.டபிள்யூ.டி பிரிவு மாணவர் என்றால்) ஆகியவற்றை இன்விஜிலேட்டரிடம் காண்பிக்க வேண்டும் ;
படி 5: சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு, பதிவு எண் அடிப்படையில் அவர்களின் தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.