பிப்ரவரி அமர்வுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ( ஜேஇஇ மெயின்) அட்மிட் கார்டு jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பிப்ரவரி 23 முதல் 26 வரை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு நடைபெற உள்ளது.
NTA JEE Main Admit Card 2021: ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. விண்ணப்தாரர்கள் nta.ac.in, jeemain.nta.nic.in என்ற இணைய முகவரியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிப்ரவரி ( 23 - 26 ) மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் (மார்ச் (15- 18) , ஏப்ரல் (27 to 30) & மே (24 to 28) தேர்வு நடைபெறும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம். மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள்.
தேர்வு அட்மிட் கார்டைப் பதிவிறக்க, மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, ‘download admit card’ என்ற இணைப்பைக் கிளிக் செய்க. பதிவு எண், கடவுச்சொல் மூலம் உள்நுழைக. அட்மிட் கார்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்றும், மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் ஜே.இ.இ மெயின் தேர்வை ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு எடுத்துள்ளது.
அண்மையில் முடிவுற்ற ஜேஇஇ தேர்வுகளின் வினா மற்றும் விடைத்தாட்களை புரட்டிப் பார்ப்பது மிகவும் நல்லது.