ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் – கல்வி அமைச்சர்

பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 27-30 தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், கொரொனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

JEE Main Exam 2021 postponed, JEE Main Exam April 2021 postponed, ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு; ஜேஇஇ, ஜேஇஇ மெயின் தேர்வுகள் 2021, ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு, ஜேஇஇ மெயின் தேர்வுகள், JEE Mani Exam, jee main exam postponed, jee exam, JEE exam, JEE, NTA, Ramesh Pokriyal Nishank, India

JEE Main Exam April 2021: பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 27-30 தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், கொரொனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய தேர்வு முகமை (NTA) இன்று ஜே.இ.இ (JEE) மெயின் மெயின் தேர்வுகள் 2021 நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான தேர்வு அறை நுழைவு அட்டைகள் விரைவில் வெளியிடப்படவிருந்தது. ஆனால், இப்போது இந்த செயல்முறை நிறுத்தப்பட்டுள்ளது. “கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தற்போதைய நிலைமையைப் பார்த்து, தேர்வர்கள் மற்றும் தேர்வு செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வையும் கணக்கில் கொண்டு JEE முதன்மை தேர்வுகள் 2021ம் ஆண்டு ஏப்ரல் அமர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை அலுவலகம் அறிவித்துள்ளது.

JEE மெயின் தேர்வுகள் 2021 ஏப்ரல் அமர்வுக்கான புதிய திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். புதிய தேதிகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வுகள் 2021, ஏப்ரல் 27-30ம் தேதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நம்முடைய மாணவர்களின் பாதுகாப்பும் அவர்களின் கல்வியும்தான் எனது முக்கிய கவலைகள் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் கல்வி நடவடிக்கையை மோசமாக பாதித்தது. கிட்டத்தட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் தாமதமானது. ஜே.இ.இ மெயின் தேர்வுகள், ஜே.இ.இ அட்வான்ஸ்டு மற்றும் நீட் தேர்வுகள் 2020 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றன.

இந்த தேர்வுகள் திட்டமிடப்பட்ட காலத்தில் நடத்தப்படாததால், 2021-22 கல்வி ஆண்டு படிப்புகளும் தாமதமாகத் தொடங்கியது. வழக்கமாக மே மாதம் நடைபெறும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3ம் தேதியும், நீட்-யுஜி ஆகஸ்ட் 1ம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜே.இ.இ மெயின் 2021 ஏப்ரல் மாத தேர்வுகள் நுழைவு அட்டையை வெளியிடுவதோடு, தேர்வு நிறுவனம் ஒரு சுய உறுதிமொழி படிவத்தையும் வெளியிடும். இந்த படிவம் அனைத்து ஜே.இ.இ மெயின் தேர்வு விண்ணப்பதாரர்களாலும் நிரப்பப்பட வேண்டும். மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளும்போது கடந்த 14 நாட்களில் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், தொண்டை புண் / மூக்கு ஒழுகுதல் அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்வதே இந்த முயற்சி / சுய உறுதி மொழி படிவம் ஆகும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jee main exam april 2021 postponed

Next Story
TNPSC Recruitment 2018: தமிழ்நாடு சிறைத்துறையில் வேலை.. விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!NPCIL Recruitment 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com