100"சதவிகித மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தர வரிசையில் 632"வது இடம் பிடித்த மாணவன் உட்பட 8 மாணவர்கள் 99"சதவிகிதம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இம்மையத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வு, மெடிக்கல், ஐடிஐ, ஜே.இ.இ தேர்வு போன்ற தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்வது என சிறப்பு பயிற்சி வழங்கபட்டு வருகின்றது.
இதற்காக சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜே.இ.இ மெயின்ஸ் 2024 எனும் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் இம்மையத்தில் பயிற்சி பெற்ற 9 மாணவர்கள் 99 சதவீகிதத்திற்க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவ்வாறு சாதனை படைத்த மாணவர்களுக்கு பயிற்சி மையத்தில் மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்க பட்டது. மேலும் மாணவர்களுக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி சிறப்பு பரிசுகள் வழங்கபட்டது.
இதனை தொடர்ந்து 100"சதவிகித மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தர வரிசையில் 632"வது இடம் பிடித்த மாணவன் ஸ்ரீ ராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகாஷ் பயிற்சி மையத்தில் தான் ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வருகின்றதாகவும் இங்கு அளிக்க படும் பயிற்சியும், பள்ளி பாட திட்ட புத்தகங்களும் 98 சதவிகிதம் சேர்ந்தே உள்ளதால் இம்மையத்தில் அளிக்க படும் பயிற்சிகளை மட்டும் முழுமையாக கற்று கொண்டேன். அவ்வாறு கற்றவைகள் தற்போது தன்னை 100 சதவீகிதம் தேர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இவருடன் பயிலும் 8 மாணவர்கள் 99"சதவிகிதம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி மைய ஆசிரியர்கள் சக மாணவர்கள் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். இந்த நிகழ்வில் பயிச்சி மைய முதன்மை கல்வி தலைவர் தீரஜ் மிஸ்ரா, ஆர்.எஸ்.புரம் கிளை மேலாளர் செந்தில் குமார், ஆகாஷ் எஜுகேஷனல் பயிற்சி மைய துணை இயக்குநர் சஞ்சய் காந்தி, பீளமேடு கிளை மேலாளர் நவீன் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை