ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியானது: மதிப்பெண்களை செக் செய்வது எப்படி?

JEE Main 2021 Result announcement : மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம். சிறந்த செயல் திறனின் அடிப்படையில் தரவரிசையில் இடம் பெறுவார்கள்

JEE Main Exam Result 2021 News Updates nta.ac.in:  நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்நோக்கி இருக்கும் ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. மாணவர்கள் தங்கள் மார்க் ஷீட்டை jeemain.nta.nic.in மற்றும் http://www.nta.ac.in இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

JEE Main Result 2021 Live Updates

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிடெக், பிஇ படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியியல் முதன்மை நுழைவுத் தேர்வு எளிதாக இருந்ததாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். பிப்- 23ம் தேதி தொடங்கிய ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது.

வினாக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதால், தேர்வு எளிதாக இருந்தாக மாணவர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

FIITJEE என்ற கல்வி நிறுவனத் தலைவர் ரமேஷ் பாட்லிஷ் கூறுகையில், “கடந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண்ணை விட சற்றே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மீதமுள்ள ஏப்ரல், மே மாத அமர்வுகளைப் பொறுத்து உண்மையான கட்-ஆஃப் மதிப்பெண் அமையும்” என்று தெரிவித்தார்.

ராய் இன்ஸ்டிடுயூட் ( கொல்கத்தா ) கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சினேகாஷ் பானர்ஜி கூருகையில் “ பொது பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 90 முதல் 100 வரை என்றளவில் வேறுபடலாம், இடஒதுக்கீடு பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 60- 70 என்றளவில் இருக்கும். 200க்கு மேல் மதிப்பெண் பெறும் தேர்வர்கள் 90 – 100 விழுக்காடு மதிப்பெண்களை பெற முடியும்” என்று தெரிவித்தார்.

கணிதத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் நுழைவு பட்டியலில் இடம்பெற முடியும் என ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் தேசிய கல்வி இயக்குனர் அஜய் குமார் சர்மா கூறினார். இதுகுறித்து கூறுகையில், ” கணிதத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் நுழைவு பட்டியலில் இடம்பெற முடியும். ஒட்டுமொத்தமாக தேர்வு எளிதானது. வினாக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும், கணிதப் பகுதி ஒப்பீட்டளவில் கடுமையாக இருந்தது. வேதியியல் பகுதியிலும், சில நுட்பமான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி புத்தங்களில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜேஇஇ நுழைவுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு தேர்வு எளிதானதாக தோன்றலாம்” என தெரிவித்தார்.

முன்னதாக, ஜேஇஇ முதன்மை தேர்விற்கான உத்தேச விடையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. உத்தேச விடைகள் தொடர்பாக முறையீடு செய்வதற்கான கால அவகாசமும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டது.

NTA JEE Main result 2021 : மார்க் ஷிட் டவுன்லோட் செய்வது எப்படி?

nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

முகப்புப்பக்கத்தில், ‘result/scorecard’ என்பதை கிளிக் செய்க.

ஜேஇஇ முதன்மை தேர்விற்கான பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் குறிப்பிட வேண்டும்.

தேர்வு மதிப்பெண் விவரம் திரையில் தோன்றும்

தேர்வு மதிப்பெண் சீட்டைபதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

எதிர்கால தேவைக்காக மதிப்பெண் சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் என்ஐடி, ஐஐஐடி, சிஎஃப்டிஐ போன்ற உயர்க்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் இளநிலை கட்டிடக்கலைஞர் (BArch), இளநிலை வடிவமைப்பாளர் (BDes),ஒருங்கிணைந்த இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப பட்டங்கள், ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டம் பாடதிட்டங்களுக்கும் சேர தகுதி பெறுகிறார்கள்.

ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் ஜேஇஇ தேர்வு, வரும் கல்வியாண்ல் இருந்து ஜேஇஇ தேர்வை மாணவர்கள் ஒன்று முதல் நான்கு முறை வரை எழுதலாம். பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் (மார்ச் (15- 18) , ஏப்ரல் (27 to 30) & மே (24 to 28) தேர்வு நடைபெறும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம். மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Web Title: Jee main exam result 2021 news updates jee main 2021 marsheet download jeemain nta nic in

Next Story
சென்னை ஐஐடி: பெண்களை ஊக்குவிக்க ரூ.14 கோடி நிதியுதவி திட்டம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com