ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் : 6 மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிப்பு

JEE Main Exam : ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 6 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

JEE Main Exam 2021 : ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் 6 மாணவகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தில் சேர ஜேஇஇ எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.  நாடு முழுவதும் லட்சக்கணக்காக மாணவர்கள் எழுதும் இந்த தேர்வு நடப்பு 2021-ம் ஆண்டு 4 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்கட்ட தேர்வு கடந்த பிப்ரவரி 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற்றது. இதில்  மொத்த 6.61 லட்சம் (6,61,776) மாணவர்கள பதிவு செய்திருந்த நிலையில், 6.52 லட்சம் (6,52,627) பேர் பிஇ மற்றும் பிடெக் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

பிரீமியம் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ மெயின்) கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 4 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்ற தேர்வில், கொரோனா தொற்றுக்கு கடுமையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது.

NTA declares JEE Main result, 6 students score 100 percentile

இந்த தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை nta.ac.in, ntaresults.nic.in மற்றும் jeemain.nta.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்வுக்கான இறுதி பதில் விசை (Answar Key) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த தேர்வில் ஆறு மாணவர்கள் 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதுள்ளது.

இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த சாகேத் ஜா, பிரவர் கட்டாரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த ரஞ்சிம் பிரபால் தாஸ், சண்டிகரைச் சேர்ந்த குராம்ரித் சிங், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்தாந்த் முகர்ஜி, குஜராத்தைச் சேர்ந்த அனந்த் கிருஷ்ணா கிடாம்பி ஆகியோர் 100 சதவீதம் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில், 10 மாணவிகள் 99 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக சமீபத்தில் மாநிலங்களவையில் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறுகையில், கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியல் கடந்த ஆண்டு வரை மூன்று மொழிகளில் மட்டுமே தேர்வுகள் செய்யப்பட்டன, ஆனால் இந்த முறை 13 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு 10 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜே.இ.இ மெயின் 2020 இல், செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில், மொத்தம் 6 லட்சம் (6,49,612) மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து கடந்த ஜனவரி நடத்தப்பட்ட தேர்வில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட (8,84,138) மாணவர்கள் எழுதினர். இதேபோல், 2020 ஆம் ஆண்டில் ஜே.இ.இ அட்வான்ஸ்ட்டில் மொத்தம் 1.5 லட்சம் மாணவர்கள் (1,50,838) மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Jee main exam result 6 students score 100 percentile

Next Story
காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.Tamil Nadu Police Recruitment 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com