ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் : ராஜஸ்தான், தெலுங்கானா தொடர்ந்து அசத்தல்

JEE main 2020 exam results : ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

By: Updated: January 18, 2020, 05:38:24 PM

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

என்ஐடி, ஐஐடி, மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டும் சிஎப்டிஐ மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் பி.டெக் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜேஇஇ முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது.

2020ம் ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு, ஜனவரி 6 முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். தேர்வு நடந்து 8 நாட்களுக்குள்ளாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. போட்டித்தேர்வுகள் வரலாற்றிலேயே, இவ்வளவு விரைவாக தேர்வு முடிவுகள் வெளியானது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பார்த் திவிவேதி, அகில் ஜெயின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோங்கலா அருண் சித்தார்த்தா மற்றும் ஷாகரி கவுசல் குமார் ரெட்டி முழுமையாக 100 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

2019 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற இந்த தேர்வுகளிலும் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐஐடிகளில் மேற்படிப்பு படிக்க உதவும் JEE அட்வான்ஸ்டு தேர்வு எழுத, இந்த ஜேஇஇ முதன்மை தேர்வு தகுதித்தேர்வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள ஜேஇஇ முதன்மை தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Jee main exam results jee main 2020 rajasthan telangana successively topper

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement