Advertisment

JEE Main 2024: ஜே.இ.இ மெயின் தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது?

JEE Main 2024: இந்த ஆண்டு ஜே.இ.இ மெயின் தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டுகள் நிலவரம் என்ன? ரிசல்ட் எப்போது?

author-image
WebDesk
New Update
jee main

ஜே.இ.இ மெயின் தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும்?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

JEE Main Result 2024: ஜே.இ.இ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் அமர்வுகளை எழுதியவர்கள், இந்த ஆண்டு ஜே.இ.இ (JEE) மெயின் கட்-ஆப்பில் சிறிய உயர்வை எதிர்பார்க்கலாம், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் கடந்த ஆண்டுகளின் கட்-ஆஃப் அதிகரிப்பு காரணமாக இந்த ஆண்டும் கட் ஆப் சிறிது அதிகரிக்கலாம். இரண்டு அமர்வுகளிலும் ஜே.இ.இ முதன்மை தேர்வர்களின் எண்ணிக்கை 24 லட்சத்திற்கும் அதிகமாகவும், அதாவது அமர்வு 1 இல் 12,21,624 ஆகவும், அமர்வு 2 இல் 12.57 லட்சமாகவும் இருந்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: JEE Main expected cut-off, final answer key release updates

பொது தரவரிசைப் பட்டியல் அல்லது பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஜே.இ.இ முதன்மை கட்-ஆஃப் கடந்த ஆண்டு 90.7788642 ஆக இருந்தது. இது 2022 ஐ விட 2.3667259 புள்ளிகள் அதிகமாகும்.

காம்பெட்டிஷன் (Competishun) நிறுவனத்தின் மோஹித் தியாகியின் கூற்றுப்படி, பொதுப் பிரிவினருக்கான ஜே.இ.இ அட்வான்ஸ்டுக்குத் தகுதி பெறுவதற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வு கட்-ஆஃப் கடந்த ஆண்டு 90.7788642 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 92.19 ஆக அதிகரிக்கும். OBC-NCLக்கு, கட்-ஆஃப் 77.67 ஆக இருக்கும்.

ஜே.இ.இ முதன்மைத் தேர்வு எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் 2024

பொதுப் பிரிவு - 92.19

OBC-NCL - 77.67

எஸ்.சி - 59.3

எஸ்.டி - 46.86153846

GEN-EWS - 79.37076923

ஜே.இ.இ மெயின் கட்-ஆஃப் என்பது, தேர்வில் பங்கேற்கும் மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு அமர்வின் சிரம நிலை உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.

JEE முதன்மை தேர்வு கட்-ஆஃப் கடந்த 5 ஆண்டுகள் நிலவரம்

அமர்வு 1 இல், மாணவர்கள் 99.96 சதவீதத்தை எட்டியுள்ளனர், இது போட்டிக்கான களத்தை அமைத்தது, என மோஷன் எஜுகேஷன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நிதின் விஜய் மீண்டும் வலியுறுத்தினார். அமர்வு 2 தாள் 1 தேர்வுகள் மிதமானதாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, தேர்வர்கள் அமர்வு 1 இல் பதிவுசெய்யப்பட்ட முந்தைய அளவுகோலைத் தாண்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கேள்விகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தில் இருந்து வருவதால், வாய்ப்புகள் உள்ளன. எனவே மாணவர்கள், அமர்வு 1 தேர்வு முடிவை விட அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம் என்று விஜய் கூறினார்.

தேசிய தேர்வு முகமை (NTA) ஏப்ரல் 12 ஆம் தேதி கூட்டு நுழைவுத் தேர்வின் (JEE) இரண்டாம் அமர்வின் தாள் 1 தேர்வுகளை முடித்தது. JEE முதன்மை தேர்வு முடிவை ஏப்ரல் 25 ஆம் தேதி NTA அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் JEE முதன்மை தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளமான https://jeemain.nta.ac.in/ இல் வெளியிடப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment