JEE Main II 2019 Registration Process to Begin from Feb 8: ஜே.இ.இ மெயின் தேர்வு 2019, இரண்டாம் தாளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள், பிப்ரவரி 8 முதல் மார்ச் 7-ம் தேதி வரை, jeemain.nic.in என்ற தளத்தில் அதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 6, 2019 முதல் ஏப்ரல் 30, 2019 வரை இதற்கான நுழைவுத்தேர்வுகள் நடைப்பெறுகின்றன. இந்தந் தேர்வுக்கான அடையாள அட்டையை மார்ச் 18, 2019 முதல் தேர்வாளர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜே.இ.இ மெயின் தேர்வு 2019-க்கு எப்படி அப்ளை செய்வது?
முதல் படி - அதிகாரப்பூர்வ பக்கமான jeemain.nic.in -ஐ ’விசிட்’ செய்யவும்.
2-ம் படி - ’ஆன்லைன் அப்ளிகேஷன் ப்ராசஸ்’ லிங்கை க்ளிக் செய்யவும்.
3-ம் படி - தேவையான அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்யவும்.
4-ம் படி - ’சப்மிட்’ பட்டனை அழுத்தவும்.
ஜே.இ.இ மெயின் தேர்வு 2019 இரண்டாம் தாளுக்கான ‘சிலபஸ்’
இயற்பியல்
இதில், பொதுவான தலைப்புகள், ஆய்வுகள், வேதியியல் அமைப்பு, வேதியியல் சமநிலை, மின்வேதியியல், ரசாயன இயக்கவியல், திட நிலை, தீர்வுகள், மேற்பரப்பு வேதியியல் மற்றும் அணுசக்தி வேதியியல் ஆகியவற்றுக்கான கேள்விகள் இந்த பிரிவில் உள்ளடங்குகிறது. தவிர இயக்கவியல், வெப்ப இயற்பியல், மின்சாரம் மற்றும் காந்தவியல், ஒளியியல் மற்றும் நவீன இயற்பியல் ஆகியவைகளுக்கான கேள்விகளும் இதில் அடங்கும்.
கனிம வேதியியல்
தனிமங்கள், தயாரிப்பு மற்றும் பண்புகள், கலவைகள், மாற்றக் கூறுகள் (3D தொடர்), தாதுக்கள், பிரித்தெடுக்கப்பட்ட உலோகம் மற்றும் தரம் பகுப்பாய்வு கொள்கைகளை தனிமைப்படுத்தல் ஆகியவற்றிற்கான கேள்விகள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.
ஆர்கானிக் வேதியியல்
நில அபகரிப்பு வழக்கில் பி.எஸ். ஹூடாவின் இல்லத்தை சி.பி.ஐ சோதனையிட்டது. இதனை அடிப்படையாக வைத்து, கருத்துகள், தயாரிப்பு, பண்புகள், அல்கான்கள், அல்கின்கள், பென்சீன் எதிர்வினைகள், ஃபீனோல்கள், குணாதிசய விளைவுகள், கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் பெப்டைடுகள், விளைவுகள், பாலிமர் மற்றும் ஆர்கானிக் வேதியியலின் பயன்கள், ஆகியவற்றிற்கான கேள்விகள் இந்தப் பிரிவிலிருந்து கேட்கப்படும்.
கணிதம்
அல்ஜீப்ரா, டிரிக்னோமெட்ரி, பகுப்பாய்வு வடிவியல், டிஃபரென்ஷியல் கால்குலஸ், இன்டெக்ரல் கால்குலஸ் மற்றும் வெக்டார் ஆகியவைகள் இதில் அடங்கியுள்ளது.
ஜே.இ.இ மெயின் தேர்வு 2019, இரண்டாம் தாளுக்கான தகுதி
படிப்புத் தகுதி - தேர்வாளர்கள் கணிதம், இயற்பியல், வேதியியலை உள்ளடக்கிய அறிவியல் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணோடு 12-ம் வகுப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அப்ளிகேஷன் கட்டணம்
ஆண்கள் பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். ரிசர்வ் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.250 மட்டுமே.
ஜே.இ.இ மெயின் தேர்வு 2019, முதல் மற்றும் இரண்டாம் தாள்
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள் இரண்டு தாளுக்கும் சேர்த்து ரூ.1300-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் பெண்கள் மற்றும் ரிசர்வ் பிரிவினருக்கு ரூ.650 மட்டும் செலுத்தினால் போதுமானது.