இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (IIT- Madras) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கான செப்டம்பர் 2023 தொகுதிக்கான விண்ணப்பங்களைத் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பாடநெறி, மாணவர்கள் பெற்ற பொறியியல் கொள்கைகள் மற்றும் அறிவைப் பயன்படுத்தி, பயன்பாடுகளுக்கான அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை செயல்படுத்தவும் மேம்படுத்தவும் அனுமதிக்கும். இந்தப் படிப்பிற்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 27, 2023 ஆகும்.
எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த BS படிப்பு ஜூன் 25, 2023 அன்று முடிவடைந்த முதல் சுற்றில் 1800 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்று ஐ.ஐ.டி-மெட்ராஸ் கூறுகிறது. இதில், 1200 க்கும் மேற்பட்டோர் வழக்கமான நுழைவுத் தேர்வாளர்களாக உள்ளனர், அவர்கள் ஆகஸ்ட் 6, 2023 அன்று நடத்தப்படும் தேர்வை உள்ளடக்கிய தகுதிச் செயல்முறையின் மூலம் சேர்க்கை பெற வேண்டும். மீதமுள்ள விண்ணப்பங்கள் படிப்பில் நேரடியாக சேர்க்கை பெறக்கூடிய JEE விண்ணப்பதாரர்களிடமிருந்து வந்தவை.
இதையும் படியுங்கள்: TNEA பொறியியல் கவுன்சிலிங்: இந்த ஆண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம்?
இந்த படிப்பு ஐ.ஐ.டி மெட்ராஸின் இரண்டாவது BS பட்டம் மற்றும் நாட்டின் குறைக்கடத்தி பணியுடன் (செமி கண்டக்டர் மிஷன்) இணைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை தலைவர்களுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்ட இந்த படிப்பானது, ஐ.ஐ.டி மெட்ராஸில் உள்ள தனிப்பட்ட ஆய்வகங்களை உள்ளடக்கி, மின்னணு அமைப்புகளைப் பற்றிய மாணவர்களின் புரிதலை மேம்படுத்தும் நடைமுறைப் பயிற்சியை உறுதி செய்கிறது.
படிப்பை முடித்த பிறகு, எலக்ட்ரானிக் சிஸ்டம் டிசைனர், உட்பொதிக்கப்பட்ட சிஸ்டம் டெவலப்பர், எலக்ட்ரானிக் ஹார்டுவேர் ஸ்பெஷலிஸ்ட், சிஸ்டம் டெஸ்டிங் இன்ஜினியர் மற்றும் மின்னணுவியல் ஆராய்ச்சி பொறியாளர்.போன்ற பல்வேறு திறன்களில் வாகனம், குறைக்கடத்தி மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் உட்பட பல்வேறு துறைகளில் வேலை செய்யக்கூடிய வகையில் மாணவர்கள் தொழில்துறைக்குத் தயாரான திறன்களைப் பெற்றிருப்பார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil