JEE Main 2021: மார்ச் மாத அமர்வுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு விண்ணப்ப செயல்முறை இன்று தொடங்கியது.
ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள், jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் 03.03.2021 முதல் 06.03.2021 வரை மட்டும் புதிதாக சமர்ப்பிப்பதற்கு/பூர்த்தி செய்வதற்குமான வசதி ஆன்லைனில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த முறை மார்ச் 6ம் தேதிக்குப் பிறகு, விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜேஇஇ மெயின் தேர்வு: ஆன்சர் கீ வெளியீடு, செக் செய்வது எப்படி?
மேலும், பி.இ. / பி.டெக் படிப்புகளுக்கான முதல் தாள் தேர்வுக்கு மட்டுமே மார்ச், ஏப்ரல் மாதத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தனது அறிவிப்பில் தெரிவித்தது. இளநிலை கட்டிடக்கலைஞர் (BArch), இளநிலை வடிவமைப்பாளர் (BDes) போன்ற இரண்டாம் தாள் தேர்வுக்கு மாணவர்கள் மே மாத அமர்வின் போது விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்" என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே ஒன்று அல்லது நான்கு கட்டத் தேர்வுகளுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். முன்பைப் போல், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்வுக் கட்டணங்களை அடுத்த கட்டத் தேர்வுக்கு தேர்வர்கள் மாற்றிக் கொள்ளாலம். தேர்வினை எழுத முடியாத மாணவர்கள் கட்டணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜே.இ.இ மெயின் தேர்வை ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு எடுத்துள்ளது. இந்தி, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து மாணவர்கள் தேர்வை எழுதலாம். எனினும், தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் என இரண்டில் ஒன்றை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். எனவே, விண்ணப்ப செயல்முறையின் போது, இதை கவனத்தில் கொள்வது மிக முக்கியமானதாகும்.
விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 8287471852, 8178359845, 9650173668, 9599676953 மற்றும் 8882356803 மின்னஞ்சல் தொடர்புக்கு jeemain@nta.ac.in.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“