Advertisment

JEE Main 2019 Paper 2: தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

JEE Main Paper 2 2019 Result Declared : தேர்வு முடிகளை @jeemain.nic.in இணையத்தில் பார்க்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
@jeemain.nic.in

@jeemain.nic.in

JEE Main Paper 2 2019 Result : ஜேஇஇ மெயின் பேப்பர் 2 தேர்வை எதிர் கொண்ட மாணவர்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.

Advertisment

நாட்டின் உயர்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடி, என்ஐடிகளில் சேருவதற்காக ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 8.74 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.

ஜேஇஇ மெயின் தேர்வுகள் 2 விதங்களில் நடத்தப்படும். பேப்பர் 1 முற்றிலும் கணினி அடைப்படையில் உடையது. பேப்பர் 2 கணினி, திறனாய்வு சோதனை, எழுத்து முறை தேர்வு என பல பிரிவுகளில் நடைப்பெறும். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஜேஇஇ மெயின் தேர்வு பேப்பர் 1 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியது.

JEE Main Paper II Result Announced @jeemain.nic.in : தேர்வு முடிவுகளை எப்படி பார்க்கலாம்!

அதனைத் தொடர்ந்து, பேப்பர் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளையும் எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்தனர். இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு .  உங்களது தேர்வு முடிகள் இன்று (1.2.19) அல்லது நாளை வெளியாகும் என்று  தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேஇஇ மெயின் பேப்பர் 2 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் மாணவர்கள்  தெரிந்க்துக் கொள்ளலாம். @jeemain.nic.in என்ற அதிகாரப் பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள முடியும்.

படி 1: அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கமான @jeemain.nic.in செல்ல வேண்டும்.

படி 2: ‘jee main 2019 paper-II NTA score’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி 3: உங்களின் பதிவு செய்யப்பட்ட தேர்வு எண்ணை குறிப்பிட வேண்டும்.

படி 4: இப்போது உங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment