JEE Main Result 2019: ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எனப்படும் ஜே.இ.இ தேர்வு முடிவுகள் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.
அதன் பிறகு கவுன்சிலிங், அட்மிஷன், செலக்ஷன் ப்ராசஸ் என மூன்று முக்கிய விஷயங்கள் இருக்கின்றன.
ரிசல்ட் வந்ததும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இருக்கின்றன.
JEE மெயின் - JEE அட்வான்ஸ்டு
ஐ.ஐ.டி-யில் அட்மிஷன் பெற, JEE மெயின் தேர்வு JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதித் தேர்வாகும். ஆனால் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற எல்லாருமே ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வெழுத தகுதியானவர்கள் என சொல்ல முடியாது.
2,45,000 ரேங்குகளுக்குள் வருபவரால் தான் அட்வான்ஸ்டு தேர்வெழுத முடியுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.இ.இ மெயின் தேர்வை ஏற்றுக் கொள்ளும் கல்லூரிகள்
ஜே.இ.இ மெயின் தேர்வில் வெற்றி பெறாதவர்களும், அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பாதவர்களும் இளங்கலை பட்டம் பெற கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்.
தனியார் கல்லூரிகள், மாநில அளவிலான அரசு கல்லூரிகளில் மாணவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
மற்ற நுழைவுத்தேர்வு
சில தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் BITSAT அல்லது VTUEEE ஆகிய நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.
உங்கள் ரேங்கை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்
இதன் மொத்த ப்ராசஸும் எவ்வாறு நடத்தப்படுகிறது, எதன் அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டு, ரேங்க் முறை அறிவிக்கப்படுகிறது என்பதை மாணவர்கள் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சதவிகிதம் அல்லது அதற்குக் குறைவான மாணவரின் மதிப்பெண் ஒரு சதவீத மதிப்பாகவோ அல்லது நார்மல் மதிப்பெண்ணாகவோ கருதப்படும்.
மறு தேர்வு
ஒருவேளை மாணவர்கள் தங்களின் மதிப்பெண்ணில் திருப்தியடையவில்லை எனில், மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜே.இ.இ மெயின் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. அதனால் ஐ.ஐ.டி-யில் படிக்க விரும்புவோர்கள் மறுத்தேர்வுக்காக அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அடுத்த ஜே.இ.இ மெயின் தேர்வு ஜனவரி 2020-ல் நடத்தப் படுகிறது.