ஜே.இ.இ மெயின் தேர்வு ரிசல்ட்: தெலங்கானா மாணவர்கள் 15 பேர் சாதனை; தமிழகத்தில் இருந்து 2 பேர் மட்டும் 100 பர்சன்டைல்
ஜே.இ.இ. மெயின் தெர்வு முடிவுகளில் 56 மாணவர்கள் 100 பர்சண்டைல் மதிப்பெண் பெற்றனர். அவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த 15 பேர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் 93.2 சதவீதம், இ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு 81.32, ஓ.பி.சி-க்கு 79.6, எஸ்.சி-க்கு 60.09, எஸ்.டி-க்கு 46.69 சதவீதம் கட் ஆஃப் மதிப்பெண்களாக உள்ளன.
Advertisment
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) புதன்கிழமை (ஏப்ரல் 24) ஜே.இ.இ. மெயின் 2 அமர்வு தேர்வு முடிவுகளை அறிவித்தது. இந்த ஆண்டு, ஜே.இ.இ. மெயின் தெர்வு முடிவுகளில் 56 மாணவர்கள் 100 பர்சண்டைல் மதிப்பெண் பெற்றனர். அவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த 15 பேர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் 100 பர்சண்டைல் மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் இருந்தனர்.
ஜே.இ.இ டாப்பர் பட்டியலில் 2024-ல் உள்ள 56 மாணவர்களில் 2 பேர் மட்டுமே பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஜே.இ.இ. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான - jeemain.nta.ac.in-ல் பார்க்கலாம்.
இந்த ஆண்டு, மொத்தம் 11,79,569 மாணவர்கள் ஜெ.இ.இ முதன்மை இரண்டாம் அமர்வு தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களில் 3,73,515 பெண் விண்ணப்பதாரர்கள், 8,06,045 ஆண்கள், 9 பேர் திருநங்கைகள் ஆவர். அதே நேரத்தில், மாற்றுத்திறனாளிகள் 3369 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.
Advertisment
Advertisements
ஜே.இ.இ. தாள் 1-ல் 100 பர்சண்டைல் என்.டி.ஏ மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் (பி.இ/பி.டெக்)
வரிசை எண்
விண்ணப்பதாரர் பெயர்
மாநிலம்
1
கஜரே நீல்கிருஷ்ண நிர்மல்குமார்
மகாராஷ்டிரா
2
தக்ஷேஷ் சஞ்சய் மிஸ்ரா
மகாராஷ்டிரா
3
ஆரவ் பட்
ஹரியானா
4
ஆதித்ய குமார்
ராஜஸ்தான்
5
ஹண்டேகர் விதித்
தெலங்கானா
6
முத்தவரபு அனூப்
தெலங்கானா
7
வெங்கட சாய் தேஜா மதினேனி
தெலங்கானா
8
சிந்து சதீஷ் குமார்
ஆந்திர பிரதேசம்
9
ரெட்டி அனில்
தெலங்கானா
10
ஆர்யன் பிரகாஷ்
மகாராஷ்டிரா
11
முகுந்த் பிரதீஷ் எஸ்
தமிழ்நாடு
12
ரோஹன் சாய் பப்பா
தெலங்கானா
13
ஸ்ரீயாஷாஸ் மோகன் கல்லுரி
தெலங்கானா
14
கேசம் சன்ன பசவ ரெட்டி
தெலங்கானா
15
முறிகினாட்டி சாய் திவ்யா தேஜா ரெட்டி
தெலங்கானா
16
முகமது சுபியான்
மகாராஷ்டிரா
17
ஷேக் சூரஜ்
ஆந்திரப் பிரதேசம்
18
மகினேனி ஜிஷ்ணு சாய்
ஆந்திரப் பிரதேசம்
19
ரிஷி சேகர் சுக்லா
தெலங்கானா
20
தோட்டம்செட்டி நிகிலேஷ்
ஆந்திரப் பிரதேசம்
21
அன்னரெட்டி வெங்கட தனிஷ் ரெட்டி
ஆந்திரப் பிரதேசம்
22
ஹிமான்ஷு தாலோர்
ராஜஸ்தான்
23
தோட்ட சாய் கார்த்திக்
ஆந்திரப் பிரதேசம்
24
தவ்வா தினேஷ் ரெட்டி
தெலங்கானா
25
ரசித் அகர்வால்
பஞ்சாப்
26
வேதாந்த் சைனி
சண்டிகர்
27
அக்ஷத் சாப்லாட்
ராஜஸ்தான்
28
பரேக் மீட் விக்ரம்பாய்
குஜராத்
29
சிவன்ஷ் நாயர்
ஹரியானா
30
ப்ரியன்ஷ் பிரஞ்சால்
ஜார்கண்ட்
31
பிரணவானந்த் சாஜி
32
ஹிமான்ஷு யாதவ்
உத்தரப் பிரதேசம்
33
பிரதம் குமார்
பீகார்
34
சான்வி ஜெயின்
கர்நாடகா
35
கங்கா ஷ்ரேயாஸ்
தெலங்கானா
36
முரசானி சாய் யஷ்வந்த் ரெட்டி
ஆந்திரப் பிரதேசம்
37
ஷைனா சின்ஹா
டெல்லி
38
மாதவ் பன்சால்
டெல்லி
39
பாலிசெட்டி ரித்தீஷ் பாலாஜி
தெலங்கானா
40
விஷாரத் ஸ்ரீவஸ்தவா
மகாராஷ்டிரா
41
சைனவனீத் முகுந்த்
கர்நாடகா
42
தனய் ஜா
டெல்லி
43
தமடம் ஜெயதேவ் ரெட்டி
தெலங்கானா
44
கனனி ஹர்ஷல் பாரத்பாய்
குஜராத்
45
யாஷ்னீல் ராவத்
ராஜஸ்தான்
46
இஷான் குப்தா
ராஜஸ்தான்
47
அமோக் அகர்வால்
கர்நாடகா
48
இப்சிட் மிட்டல்
டெல்லி
49
மவுரு ஜஸ்வித்
தெலங்கானா
50
பாவேஷ் ராமகிருஷ்ணன் கார்த்திக்
டெல்லி
51
பாட்டீல் பிரணவ் பிரமோத்
மகாராஷ்டிரா
52
டோரிசாலா சீனிவாச ரெட்டி
தெலங்கானா
53
அர்ச்சித் ராகுல் பாட்டீல்
மகாராஷ்டிரா
54
அர்ஷ் குப்தா
டெல்லி
55
என் ஸ்ரீராம்
தமிழ்நாடு
56
ஆதேஷ்வீர் சிங்
பஞ்சாப்
தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியைத் தவிர, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 விண்ணப்பதாரர்களும் டெல்லியைச் சேர்ந்த 6 பேரும் ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் 2024 தேர்வு முடிவில் 100 பர்சண்டைல் மதிப்பெண்ணை எட்டியுள்ளனர். மேலும், ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 கட்-ஆஃப் மதிப்பெண் அனைத்துப் பிரிவுகளுக்கும் அதிகரித்துள்ளது.
ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் அறிவிப்பின்படி, பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் 93.2 பர்சண்டைல் இ.டபிள்யூ.எஸ் -க்கு 81.32, ஓ.பி.சி-க்கு 79.6, எஸ்சி-க்கு 60.09, எஸ்டி-க்கு 46.69 பர்சண்டைல் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“