/indian-express-tamil/media/media_files/2j4nZVm79Hf96FXnGXZg.jpg)
JEE Main 2024: இந்த ஆண்டு ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கான கட்-ஆஃப் உயருமா? கடந்த 5 ஆண்டு நிலவரம் என்ன?
JEE Main 2024: கடந்த ஆண்டு பொது - மாற்றுத்திறனாளி பிரிவைத் தவிர அனைத்து பிரிவுகளின் கீழும் JEE முதன்மை தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன. பொது தரவரிசைப் பட்டியல் அல்லது பொதுப் பிரிவினருக்கான கடந்த ஆண்டு ஜே.இ.இ மெயின் கட்-ஆஃப், 2022ல் 88.4121383 ஆக இருந்து, 2023ல் ஜே.இ.இ மெயினில் 90.7788642 ஆக உயர்ந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main Result 2024: Will cut-off for JEE Advanced rise this year? Check previous year trends
எனவே, விண்ணப்பதாரர்கள் JEE முதன்மை தேர்வு 2024 கட்-ஆஃப் உயரும் என்று எதிர்பார்க்கலாம்.
JEE முதன்மை தேர்வு கட்-ஆஃப்கள் பல காரணிகளைப் பொறுத்தது. ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ளும் மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, பங்கேற்கும் நிறுவனங்களில் இடங்கள் கிடைப்பது, முந்தைய ஆண்டின் போக்குகள் மற்றும் தேர்வின் சிரம நிலை ஆகியவை கட்-ஆஃப் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கூட்டு நுழைவுத் தேர்வை (ஜே.இ.இ) நடத்தும் தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மெயின் 2024 முடிவை பிப்ரவரி 12 அன்று அறிவிக்கும். இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது, விண்ணப்பப் பதிவு மார்ச் 2 வரை தொடரும். ஜே.இ.இ முதன்மை அமர்வு 2 தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 2.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் JEE அட்வான்ஸ்டுக்கு பதிவு செய்ய தகுதி பெறுவார்கள்.
JEE அட்வான்ஸ்டு 2024 முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, JoSAA கவுன்சிலிங் செயல்முறை தொடங்கும். JEE Mains 2024 தகுதியான விண்ணப்பதாரர்கள் NITகள், IIITகள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கைக்கான JoSAA கவுன்சிலிங்கிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், JEE அட்வான்ஸ்டு தகுதி பெற்றவர்கள் IITகள், NITகள் மற்றும் பிற நிறுவனங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.