தேசிய தேர்வு முகமை (NTA) கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை 2025 அமர்வு 1 தேர்வை முடித்துள்ளது. ஜனவரி 22 மற்றும் ஜனவரி 30 க்கு இடையில் நடத்தப்பட்ட ஜே.இ.இ தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்–jeemain.nta.nic.in இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main Result 2025 Session 1: Expected Date, Time, category-wise cut-off
ஜே.இ.இ முதன்மைக்கான ஆட்சேபனை சாளரத்தை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே மூடி விட்டது. இறுதி விடைகுறிப்புகள் மற்றும் ஜே.இ.இ முதன்மை தேர்வு முடிவுகள் ஒன்றாக வெளியிடப்படும். எவ்வாறாயினும், முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன், சில முக்கிய பயிற்சி நிறுவனங்கள் முன்னறிவித்தபடி எதிர்பார்க்கப்படும் கட்-ஆப் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
/indian-express-tamil/media/post_attachments/429016da-b9c.jpg)
தேர்வு முதன்மைத் தேர்வு கட் ஆஃப், தேசிய தேர்வு முகமையால் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
கட் ஆஃப் பல காரணிகளைப் பொறுத்தது. தேர்வில் பங்கேற்கும் நிறுவனங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டு போக்குகள், தேர்வின் சிரம நிலை மற்றும் தேர்வில் கலந்து கொள்ளும் மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஆகியவை கட்-ஆஃப் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜே.இ.இ முதன்மை அமர்வு 2க்குப் பிறகு அனைத்துப் பிரிவுகளுக்கும் கட்-ஆஃப் வெளியிடப்படுகிறது.
இதற்கிடையில், ஜே.இ.இ முதன்மை தேர்வு ஏப்ரல் விண்ணப்பத்திற்கான பதிவு jeemain.nta.nic.in என்ற இணையதளப் பக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு 2025 ஏப்ரல் அமர்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 25 (இரவு 9 மணி). கட்டணம் செலுத்துவதற்கான சாளரம் பிப்ரவரி 25 அன்று இரவு 11:50 மணிக்கு மூடப்படும்.
முதன்மை தேர்வு 2025 இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது - முதல் அமர்வு ஜனவரி மற்றும் இரண்டாவது அமர்வு ஏப்ரலில் நடைபெறும். அமர்வு 1 இல் ஜே.இ.இ முதன்மைத் தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின்படி, ஜனவரி 22 மற்றும் 29 க்கு இடையில் நடைபெற்ற அனைத்து ஷிப்ட்களிலும் கேள்விகள் 11 மற்றும் 12 என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களின் கிட்டத்தட்ட அனைத்து அத்தியாயங்களையும் உள்ளடக்கி இருந்தது.