NTA JEE Main 2023: ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2023க்கான பதிவு செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்த நிலையில், குறிப்பிட்ட மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றாலும் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற முடியாது. அவர்கள் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதறான நுழைவுத் தேர்வு ஜே.இ.இ தேர்வாகும். 2023 ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பச் செயல்முறை தற்போது தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் மாணவர்கள் இடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. யாரெல்லாம் இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்கள், எந்த ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் எழுதலாம் போன்ற கேள்விகள் எழுந்தது.
இதற்கு கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுத முடியாது. அதேநேரம், அட்வான்ஸ் தேர்வை 2022 மற்றும் 2023ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வரை ஜே.இ.இ தேர்வு எழுத 12 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதை தளர்த்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil