ஜே.இ.இ 2023 முதன்மை (JEE Mains) தேர்வின் முதல் அமர்வுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஜே.இ.இ மதிப்பெண்கள் மூலமாக சேர்க்கைப் பெறக் கூடிய கல்லூரிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
Advertisment
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. (IIT), என்.ஐ.டி (NIT) போன்ற நிறுவனங்களில் பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த ஜே.இ.இ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
ஜே.இ.இ முதன்மைத் தேர்வின் முதல் அமர்வுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஜே.இ.இ மதிப்பெண்கள் மூலம் சேர்க்கை பெறக் கூடிய கல்லூரிகளின் பட்டியலை கல்வி ஆலோசகர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
Advertisment
Advertisements
இந்தியாவில் மொத்தம் 23 ஐ.ஐ.டி.,கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 16,598 இடங்கள் உள்ளன. அடுத்ததாக 32 என்.ஐ.டி.,களில் மொத்தம் 23,994 இடங்கள் உள்ளன. 26 ஐ.ஐ.ஐ.டி.,களில் 7,126 இடங்கள் உள்ளன. அரசு உதவிப் பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 33 உள்ளன. அவற்றில் 6,759 இடங்கள் உள்ளன.
மொத்தம் உள்ள 52,819 இடங்களில் 40000 இடங்களுக்கு தமிழ்நாடு மாணவர்கள் போட்டியிட முடியும். மொத்த இடங்களில் 20% பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்
Indian Institute of Technology, Madras (AIQ) (மொத்த இடங்கள் – 1133, பெண்கள் - 232)
National Institute of Technology, Tiruchirapalli (Home State – 50%, Other States – 50%) (மொத்த இடங்கள் – 519 (HS), 519 (OS) பெண்கள் – 106 (HS), 105 (OS))
Indian Institute of Information Technology, Tiruchirapalli (AIQ) (மொத்த இடங்கள் – 157, பெண்கள் - 57)
Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram (AIQ) (மொத்த இடங்கள் – 410, பெண்கள் – 82)
National Institute of Food Technology Entrepreneurship and Manufacturing, Thanjavur (AIQ) (மொத்த இடங்கள் – 90)