இந்தியாவின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேர்வுகளில் ஒன்றான ஜே.இ.இ தேர்வில் தகுதி பெறுவதன் மூலம் எங்கெங்ல்லாம் படிக்கலாம்? எவ்வளவு இடங்கள் உள்ளன? தமிழ்நாட்டில் எத்தனை இடங்கள் உள்ளன? என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி மற்றும் குறிப்பிட்ட சில தலைசிறந்த தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இருந்து ஜே.இ.இ தேர்வு எழுதுவோர்கள் எண்ணிக்கை கடந்த காலங்களில் வெகு குறைவாக இருந்தாலும், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி.,களில் எவ்வளவு இடங்கள் உள்ளன? சேர்க்கை எப்படி? என்பது குறித்த தகவல்களை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி போன்றவை இந்தியாவில் தலைசிறந்த மாணவர்கள் படிக்கும் இடமாக உள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள சிறந்த நிறுவனங்களில் உயர் கல்வி பயிலவும், ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.,களில் படித்திருப்பது கூடுதல் நன்மையாகும். ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.,களில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
கல்வி நிறுவனம் |
எண்ணிக்கை |
மொத்த இடங்களின் எண்ணிக்கை |
இந்திய தொழில்நுட்ப கழகம் (IITs) |
23 |
16,598 |
தேசிய தொழில்நுட்ப கழகம் (NITs) + IIEST West Bengal |
31+1 |
23,994 |
இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (IIITs) |
26 |
7,126 |
அரசு உதவிப்பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTIs) |
33 |
6,759 |
இதன்மூலம் மொத்தம் 114 கல்வி நிறுவனங்களில் மொத்தம் 52,819 இடங்கள் உள்ளன. இவற்றில் என்.ஐ.டி.,களில் 50% இடங்கள் உள்ளூர் மாணவர்களுக்கும் 50% இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்
கல்வி நிறுவனங்கள் |
மொத்த இடங்களின் எண்ணிக்கை |
பெண்கள் ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை |
ஐ.ஐ.டி மெட்ராஸ் |
1133 |
232 |
என்.ஐ.டி திருச்சி |
1038 |
211 |
ஐ.ஐ.ஐ.டி திருச்சி |
157 |
57 |
ஐ.ஐ.டி.டி.எம் காஞ்சிபுரம் |
410 |
82 |
என்.ஐ.எஃப்.டி.இ.எம் தஞ்சாவூர் |
90 |
0 |
ஆக மொத்தம் 2,828 இடங்கள் உள்ளன. இதில் ஐ.ஐ.டி மெட்ராஸில் அனைத்து இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். என்.ஐ.டி.,யில் 50% இடங்கள் தமிழக மாணவர்களுக்கும் 50% இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.