Advertisment

JEE Mains Results: ஜே.இ.இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அப்டேட்

JEE Mains 2024 Results: ஜே.இ.இ தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை எப்போது வெளியிடும்? முக்கிய அப்டேட்

author-image
WebDesk
New Update
jee exam 2024

ஜே.இ.இ தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை எப்போது வெளியிடும்?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

JEE Mains 2024 Results: தேசிய தேர்வு முகமை (NTA) கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை 2024 (JEE Mains 2024) அமர்வு 2 முடிவை ஏப்ரல் 23 அன்று அறிவிக்கும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தேர்வு முடிவைப் பதிவிறக்கலாம் — jeemain.nta.ac.in

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: JEE Mains 2024 Session 2 Result Date: JEE Scores releasing tonight

விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவைச் சரிபார்க்க ரோல் எண் மற்றும் பிற சான்றுகள் தேவைப்படும்.

ஜே.இ.இ முதன்மை அமர்வு 2: ரிசல்ட் தேதி மற்றும் நேரம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏப்ரல் 23 ஆம் தேதி ஜே.இ.இ முதன்மை தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை அறிவிக்கும். முடிவு அறிவிக்கப்பட்டவுடன், மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான - jeemain.nta.ac.in மற்றும் ntaresults.nic.in இலிருந்து ரிசல்ட்டைத் தெரிந்துக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு, ஏப்ரல் 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு, தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ நுழைவுத் தேர்வை ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 12 வரை நடத்தியது. ஜே.இ.இ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் விடைக்குறிப்பில் உள்ள சவால்களை எழுப்ப ஏப்ரல் 14 வரை காலக்கெடு வழங்கப்பட்டது.

இரண்டு ஷிப்ட்களாக நடத்தப்பட்ட தேர்வில், முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்பட்டது. காலை ஷிப்டுக்கு காலை 7:30 மணிக்கும், மாலை ஷிப்டுக்கு மதியம் 2 மணிக்கும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

ஜே.இ.இ முதன்மை தேர்வு முடிவு வெளியானதும், வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வில் பங்கேற்கத் தகுதி பெறுகின்றனர். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IITs) சேர்க்கைக்கான தேர்வு செயல்முறை ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வின் செயல்திறனைப் பொறுத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment