/indian-express-tamil/media/media_files/2025/02/11/nMYpvu4QqpdIUdMESFlK.jpg)
Jee Mains 2025 Result Out: தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ முதன்மை 2025 அமர்வு 1 தேர்வுக்கான முடிவுகளை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவை அறிய jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
NTA Jee Main Result 2025 Declared: தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) முதன்மை 2025 அமர்வு 1 தேர்வை முடித்துள்ளது. ஜனவரி 22 மற்றும் ஜனவரி 30 க்கு இடையில் நடத்தப்பட்ட ஜே.இ.இ தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அதிகாரப்பூர்வ இணையதளத்தில்–jeemain.nta.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி ஜே.இ.இ முதன்மை மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: JEE Mains 2025 Result Out – Download Session 1 JEE Main Scorecard at jeemain.nta.nic.in
ஜே.இ.இ முதன்மை 2025 அமர்வு 1 தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் அடுத்த கட்ட தேர்வு செயல்முறைக்கு 2,50,000 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும், தகுதி பெற்ற மாணவர்களின் அகில இந்திய தரவரிசையை என்.டி.ஏ வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் இறுதி சேர்க்கைக்கான ஜே.இ.இ முதன்மை கவுன்சிலிங் 202-5ல் பங்கேற்க முடியும்.
2025 ஆம் ஆண்டு ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் மொத்தம் 14 பேர் 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். இதில் 13 பேர் மாணவர்களும், ஒரு மாணவியும் அடங்கும். மேலும், ஜே.இ.இ மெயின் 2025 தேர்வில் 44 பேர் 90 சதவீதத்திற்கும் மேல் பெற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.