கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சத்திற்கு மத்தியில், இந்த ஆண்டு ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிவதோடு கையுறை, சானிடைசர், தனியாக தண்ணீர் பாட்டில் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சத்திற்கு மத்தியில், இந்த ஆண்டு ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக் கவசம் அணிவதோடு மட்டுமல்லாமல் கையுறை, சானிடைசர், தனியாக தண்ணீர் பாட்டில் ஆகியவற்றைப் தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும் என வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் தேர்வு மைய நுழைவுச் சீட்டில் சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்த வழிமுறைகள் விவரமாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி மாணவர்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.
ஜேஇஇ, நீட் தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் உள்ளே செல்வதற்கு முன்பு உடலின் வெப்பநிலையை அறிய தெர்மல் ஸ்கேன் செய்யப்படும். உடல் வெப்பநிலை 99.4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை உள்ள தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தனியான அறை உள்ளது.
தேசிய சோதனை நிறுவனம், அல்லது என்.டி.ஏ, அறிகுறி உள்ள தேர்வர்களுக்கு இடமளிக்க ஏற்பாடு செய்துள்ள நிலையில், தேர்வர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அல்லது கோவிட்-19 நோயால் பாதிப்பு இல்லை என்றும் அல்லது சமீபத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று ஒரு சுய உறுதிமொழியை கோரியுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அறிகுறியற்றவர்களாக இருக்கலாம். ஆனால், சமீபத்தில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நபருடன் தொடர்பு கொண்டிருப்பவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதற்கான வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்தவில்லை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.
இன்று இந்த அறிவுறுத்தல்களை என்.டி.ஏ வெளியிடுவதால் ஐ.ஐ.டி.களுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் மற்றும் மருத்துவ படிப்புகளுகான நுழைவுத் தேஎர்வுகளை நடத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்கக்கூடும் என்பதைக் இந்த நடவடிக்கை குறிக்கிறது. பல மாநிலங்களில் கோவிட் கட்டுப்பாடுகள் மற்றும் வெள்ள பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.
செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜேஇஇ, நீட் ஆகிய இரண்டு தேர்வுகளுக்கு என்.டி.ஏ நுழைவு அனுமதி அட்டைகளை வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த கோரிக்கை வந்துள்ளது.
தேர்வுகளைப் பாதுகாப்பாக நடத்துவதற்காக என்.டி.ஏ வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, தேர்வு மையத்திற்கு சென்றதை அறிவிக்க வேண்டும். இது தேர்வரக்ள் ஒரு தேர்வு மையத்திற்குள் சென்றதும் அங்குள்ள அறைகள் முழுவதும் தேர்வர்களை ஒரே மாதிரியாக அமரவைக்கப்படுவதை உறுதி செய்வதற்காககவும் இந்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன்பு, ஒவ்வொரு மாணவரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். இருப்பினும், தொற்று பரவாமல் இருக்க கைகளால் தண்ணீர் திறப்பது இருக்காது.
தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன்பு தேர்வர்களுக்கு புதிய மும்மடிப்பு முகக் கவசம் அளிக்கப்பட்டு அவர்கள் ஏற்கனவே அணிந்துள்ள முகக்கவசங்களை கழற்றி எறியுங்கள் என்று கேட்கப்படும்.
செப்டம்பர் 1 முதல் 6 வரை சுமார் 8.6 லட்சம் மாணவர்களுக்கு ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படும். அதே நேரத்தில் நகர்ப்புற மையங்களில் சுமார் 15 லட்சம் மாணவர்களுக்கு நீட் யுஜி தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"