/indian-express-tamil/media/media_files/2025/10/23/jipmer-2025-10-23-13-40-47.jpg)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 66 உள்ளிருப்பு மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 3-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நெகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மருத்துவ அதிகாரிகள் புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மட்டுமல்லாமல் தென்இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு தற்போது ஏராளமான மருத்துவ அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப ஜிப்மர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி காலியாக உள்ள 66 உள்ளிருப்பு மருத்துவ அதிகாரிகள் பணியிடங்கள் 6 மாதகாலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான நேர்முக தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மயக்கவியல் மற்றும் தீவிரசிகிச்சை பிரிவு-3, பொது சிகிச்சை-8, கதிர்வீச்சு புற்று மருத்துவம்-6,பொது அறுவை நோய்வியல்-5, மனநல மருத்துவம்-3, உயிர்வேதியல்-3 உள்பட 32 பிரிவுகளில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நவம்பர் 3-ந்தேதி மாலை 4:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நேர்முகத்தேர்வு அடுத்த மாதம் (நவம்பர்) 7,8 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://jipmer.edu.in/ என்ற இணைய தளத்தை பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us