Advertisment

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ் படிப்பு: கலந்தாய்வு கமிட்டி அதிரடி உத்தரவு

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை, 100 சதவீதம் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியே நடத்த முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
JIPMER

JIPMER

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை, 100 சதவீதம் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியே நடத்த முடிவு செய்துள்ளது.

Advertisment

நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை பல்லைக்கழகம், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., எம்.டி., -எம்.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைக்கான தலைமை இயக்ககத்தின் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி நடத்தி வருகிறது.

பொதுவாக முதுநிலை மேற்படிப்புகளில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடாகவும், 50 சதவீதம் மாநில அரசு ஒதுக்ககீடாகவும், நீட்' மதிப்பெண் அடிப்படையில் நடக்கும்.

இளநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்பை பொறுத்தவரை 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடாகவும், 85 சதவீதம் ஒதுக்கீடாகவும் மாநில கவுன்சிலிங் நடக்கும்.

அந்தவகையில் இந்தாண்டு எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலும், மத்திய பல்கலைக் கழகங்களிலும், நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் 100 சதவீத கவுன்சிலிங்கை கலந்தாய்வு கமிட்டியே நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கு 100 சதவீத கவுன்சிலிங்கை மருத்துவக் கலந்தாய்வு கமிட்டியே நடத்த உள்ளது.

அதனால், புதுச்சேரி மாநிலத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் குடியுரிமை குடியிருப்பு தகுதிகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்காக ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment