scorecardresearch

10th முதல் டிகிரி வரை… திருச்சியில் வெள்ளிக் கிழமை வேலை வாய்ப்பு முகாம்!

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை 8-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருப்பதாகவும் இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
   திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 8-ந் தேதி வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன.

 இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம். மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வருகிற 8-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Job camp in trichy 10th grade is enough