அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (AIMO), அண்ணா பல்கலைக்கழகம், சுயநிதி வல்லுநர்கள், கலை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கூட்டமைப்புடன் இணைந்து கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் ஏப்ரல் 23,24 ஆகிய 2 தேதிகளில் "டெக்னோ" என்கிற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது..
கருத்தரங்கு நடைபெறும் இடத்திலே, சில நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்பாட் நேர்காணலை நடத்தவுள்ளது.
இதுதவிர, கருத்தரங்கின்போது மாணவர்களின் திறனை நிறுவனங்கள் கண்டறியும் வகையில், talent fair நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இரண்டாம் செமஸ்டர் முதலே திறன் வாய்ந்த மாணவர்களை கண்டறியும் நிறுவனங்கள், கல்வி முடியும் வரை அவர்களுடன் இணைந்திருப்பது மட்டுமின்றி கல்லூரி படிப்பை முடிக்கையில், வேலை வழங்கிட தயாராக இருக்கும்.
கருத்தரங்கின் போது, வளர்ந்து வரும் ஏழு துறைகளைச் சேர்ந்த பேச்சாளர்கள், சாத்தியமான வேலை வாய்ப்புகள் மற்றும் அவர்களது எதிர்பார்ப்புகள் குறித்து மாணவர்களுக்குத் தெரிவிப்பார்கள்.
இந்தியா முழுவதும் இருந்து சுமார் 7,000 மாணவர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் பங்கேற்பார்கள் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், திறப்பு விழாவின் போது, 50 மாணவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்படவுள்ளதாக AIMO தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil