ரூ. 30,000 வரை ஊதியம்: சென்னையில் 18-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Job Fair in Chennai News : 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

ரூ. 30,000 வரை ஊதியம்: சென்னையில் 18-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Job fair in Chennai : பட்டியலினம் மற்றும் பழங்குடியினவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம், சென்னையில் வரும் 18-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள, பட்டியலினம் மற்றும் பழங்குடியினவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தில் (வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டிடம், மூன்றாவது தளம்), காலை ஒன்பது 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை, இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்.

பிபிஓ, வங்கி, காப்பீடு, மின் வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, வேகமாக விற்பனையாகக் கூடிய நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி), மனிதவள மேம்பாடு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தனியார் நிறுவனங்களில் புதியவர்களுக்கும், அனுபவமிக்கவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளன. மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை ஊதியம் கிடைக்கும்.

20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். பட்டதாரிகளுக்கும், அதைவிட அதிக கல்வித் தகுதி உடையவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். எனினும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், தகுந்த பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேரந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும், தேவையான தகுதி மற்றும் அனுபவம்‌ பெற்றுள்ள பொதுப் பிரிவினருக்கும் முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் நேரடியாக முகாம் நடக்கும் இடத்திற்குச் செல்லலாம் அல்லது தங்களது பெயர்களை, பட்டியலினம் மற்றும் பழங்குடியினவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.

தங்கள் ஆவணங்களின் அசலையும், நகல்களையும் முகாமிற்கு எடுத்துச் செல்லுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு 044 24615112 என்ற கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, சென்னை பட்டியலின, பழங்குடியினவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் பிராந்திய வேலைவாய்ப்புத் துணை அலுவலர் திரு எஸ் கே சாஹூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Job fair in chennai for both freshers and experienced ncs job portal registration

Exit mobile version