Advertisment

10-ம் வகுப்பு மார்க் அடிப்படையில் தபால் துறை வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

நீங்கள் 10ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் தபால் துறை உங்களுக்கு அறிய வேலை வாய்ப்பை தரக் காத்திருக்கிறது. இதற்கான விண்ணப்பிக்கும் நாள் நாளையுடன் முடிவடைய உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Post Office Franchise Scheme

Post Office Franchise Scheme

job from india post who passed 10th can apply, நீங்கள் 10ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் தபால் துறை உங்களுக்கு அரிய வேலை வாய்ப்பை தரக் காத்திருக்கிறது. இதற்கான விண்ணப்பிக்கும் நாள் இன்றுடன் முடிவடைய உள்ளது என்பதால் உடனடியாக விண்ணபிக்கவும். மேலும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 தமிழ்நாட்டுக்கு 4,310 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள், திருநங்கைகள், எஸ்சி/எஸ்டி  வகுப்பினர் இலவசமாக விண்ணப்பிக்க முடியும். மற்றவர்கள் ரூ.100 ஆன்லைன் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நேரடியாக உங்கள் பகுதியிலிருக்கும் அஞ்சல் அலுவலகத்திலும் செலுத்தலாம்.

https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

தொடர்ந்து ‘Notification’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து உங்கள் கணினித் திரையில் ’Validate your details’ என்ற செய்தியுடன் புதிய பக்கம் தோன்றும்.

அதில் உங்கள் மொபைல் நம்பர் , இ-மெயில் பற்றிய விவரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 10-ம் வகுப்பு சான்றிதழில் எப்படி உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதோ அதுபோலவே உங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். அப்பா அல்லது அம்மாவின் பெயர், பிறந்த தேதி, பாலினம், சாதி, எந்த மாநிலத்தில் நீங்கள் 10ம் வகுப்பை படித்தீர்கள், எந்த ஆண்டில்  பத்தாம் வகுப்பை படித்து முடித்தீர்கள் என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து திரையில் தெரியும் செக்யூரிட்டி கோர்டை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து SUBMIT என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இதைத்தொடர்ந்து உங்களது ஆதார் எண், நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான விவரங்கள், பத்தாம் வகுப்பில் நீங்கள் தேர்வு செய்த மொழி, இதற்கு முன்பு வேலை செய்திருந்தால் அதன் ’NOC’ விவரங்கள், ஸ்கேன் செய்த உங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை காண ‘Preview’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். நீங்கள் பதிவு செய்த விவரங்கள் சரியாக இருந்தால் ’I hereby declare that’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.  தொடர்ந்து SUBMIT என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்யவும்.

தற்போது உங்களுடைய ரெஜிஸ்டர் எண் (Register no) மற்றும் உங்களுடைய விவரங்கள் திரையில் தோன்றும். இந்த விவரங்களை ‘print’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதைத்தொடர்ந்து மீண்டும் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். தற்போது ‘Apply online’  என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் ரெஜிஸ்டர் எண் (Register no) மற்றும் எந்த மாநிலத்தில் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்று முன்பு தேர்வு செய்திருந்தீர்களோ அதை  பதிவு செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து ஓடிபி (otp) உங்கள் மொபைல் எண்ணிற்க்கு அனுப்பப்படும். அதை பதிவு செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து விண்ணப்ப படிவம் தோன்றும் இதில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும் . தொடர்ந்து உங்கள் முகவரி  பற்றிய விவரங்களை பதிவு செய்தால் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டது என்ற செய்தி திரையில் தோன்றும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment