scorecardresearch

நவீன மீன் அங்காடியில் வேலை வாய்ப்பு : பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

முகாமில் பிளஸ் 2 தேர்ச்சி, டிப்ளமோ,இள நிலை பட்டம் தேர்ச்சி, தேர்ச்சி பெறாத நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த அனைவரும் பங்கேற்கலாம்.

Fish

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

புதுச்சேரி நவீன மீன் அங்காடியில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மைய உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில் நாளை சனிக்கிழமை கொட்டுப்பாளையம் நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில் வேவைாய்ப்பு முகாம் நடக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடை பெறும் இந்த முகாமில், சென்னையில் சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவ னத்தின் தொலை தொடர்பு செயல்பாட்டின் வாடிக்கையாளர் சேவை பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகாமில் பிளஸ் 2 தேர்ச்சி, டிப்ளமோ,இள நிலை பட்டம் தேர்ச்சி, தேர்ச்சி பெறாத நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த அனைவரும் பங்கேற்கலாம்.தேர்வு செய்யப்படுபவர் களுக்கு மாதம் ரூ.15 ஆயி ரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். அடிப்படை தொழில்நுட்ப திறன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 0413-2962001 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Job opportunity in modern fish shop in puducherry update in tamil