/tamil-ie/media/media_files/uploads/2018/01/jobs.jpg)
jobs
Job Recruitment 2019: அரசு வேலைகளுக்காக இன்று நாடு முழுவதும் கோடிக் கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துவிடும். மற்றவர்கள் தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் இந்தவாரம் எந்தெந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிகிறது என்பதைப் பார்ப்போம்.
FCI Recruitment 2019
ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் எஃப்.சி.ஐ-யில் இந்தியா முழுவதும் 4103 காலியிடங்கள் உள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் மார்ச் 25, 2019.
http://fci.gov.in/ என்ற தளத்தில் உடனே விண்ணப்பித்திடுங்கள்.
RRB Recruitment 2019
ஆர்.ஆர்.பி-யில் இந்தியா முழுக்க 35277 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 31, 2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் http://www.rrbchennai.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.
TNRTP Recruitment 2019
தமிழ்நாடு ரூரல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ப்ராஜெக்ட் எனப்படும் டி.என்.ஆர்.டி.பி-யில் 578 காலியிடங்கள் உள்ளன.
இதற்கு மார்ச் 31-ம் தேதிக்குள் http://rewardsocietyvpm.org/ தளத்தில் அப்ளை செய்யவும்.
TNPCB Recruitment 2019
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எனப்படும் டி.என்.பி.சி.பி-யில் 224 பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கும் மார்ச் 31-ம் தேதிக்குள் www.tnpcb.gov.in என்ற தளத்தில் மறக்காமல் அப்ளை செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us