யமஹா மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா? வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

வேலை வாய்ப்பு தேடி அலையும் இந்த இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

By: Updated: October 9, 2018, 01:16:48 PM

பிரபல மோட்டார் நிறுவனமான யமஹா நிறுவனத்தில் ஆப்ரேட்டர்கள் மற்றும் இணை ஆப்ரேட்டர்கள் பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுக்குறித்து வெளியான விளம்பரத்தில் யமஹா மோட்டார் நிறுவனத்திற்கு முன் அனுபவம் உள்ள ஆப்ரேட்டர்கள் மற்றும் இணை ஆப்ரேட்டர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வடகல் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ஆப்ரேட்டர்கள் மற்றும் இணை ஆப்பரேட்டர்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி விவரம்:

இந்த பணியில் சேர்வதற்கு ஐடிஐ(ITI), டிஎம்இ (DME), அல்லது டிஏஇ(DAE) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். ப்பணிக்கு தொடர்புடைய அனுபவங்களான ஃபிட்டிங், வெல்டிங், பெயிண்டிங், உள்ளிட்டவையும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்:

அவர்ரவர்களின் தகுதி மற்றும் முன் அனுபவங்களுக்கு ஏற்ப தகுந்த சம்பளம் அளிக்கபடும்.  இதற்கான விண்ணபங்கள் வரும் 13 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

planthr2@yamaha-motor-india.com என்ற இணையதள முகவரிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  பின்பு, தேர்ந்தெடுக்க்ப்படுவோ  நேரடி  இண்டர்வீயூக்கு  அழைக்கப்படுவார்கள்.

வேலை வாய்ப்பு தேடி அலையும் இந்த இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Job requirment in yamaha motor company

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X