/indian-express-tamil/media/media_files/2025/03/17/tBMGuvsUpc2euRqX78ty.jpg)
மதுரை மாவட்ட நலச்சங்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுகாதார மற்றும் குடும்ப நல பயிற்சி மையம், சமயநல்லூர் மற்றும் அரசு ராசாசி மருத்துவமனை ஆகியவை உட்பட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்களில் பணியாற்றுவதற்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மருத்துவ அலுவலர், நிர்வாக உதவியாளர், குளுக்கோ ஃபேசனல் தெரபிஸ்ட், சமூகப் பணியாளர், முதுநிலை ஆய்வக நுட்பநர், ஆய்வக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், நடமாடும் ஊர்தி ஓட்டுநர், சுகாதார ஆய்வாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர், தூய்மைப் பணி ஆய்வாளர், இடைநிலை சுகாதார வழங்குநர் (MLHP), செவிலியர் மற்றும் அட்டண்டர் உள்ளிட்ட பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானவை என்பதுடன், பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது எனவும் கூறப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட செயற்செயலாளர் மற்றும் மாவட்டச் சுகாதார அலுவலர், விஸ்வநாதபுரம், மதுரை-625020 என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் அல்லது dhsjobmdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் பெறும் கடைசி தேதி 24.03.2025 மாலை 5 மணி ஆகும்.
தேர்வு நேர்முகத் தேர்வாக நடத்தப்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் தகுதி, மதிப்பெண், உடல்தகுதி, முன் அனுபவம் மற்றும் சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களுக்கு: https://madurai.nic.in/notice_category/recruitment/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.