தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

NTPC Recruitment Notification 2020:

பொறியியல் பட்டதாரி தகுதிப் பெற்ற தேர்வர்களுக்கு தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. 70 காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் டிசம்பர் 12ம் தேதியோடு நிறைவடைகிறது.

இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வுக்கு மாணவர்கள்  உட்படுத்தப்படுவார்கள். முதல் கட்ட சோதனையில்  120 அப்டிட்யூட்  கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் . இரண்டாம் நிலை தேர்வில், மாணவர்களின் தொழில்நுட்ப திறன்கள் மதிப்பிடப்படும். இரண்டு தேர்விலும்,40 என்ற  குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.    இடஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதம் 30 சதவீதமாகும்.

உயர் வயது வரம்பு: 25  ( விண்ணப்ப செயல்முறையின்  கடைசி நாளில் இருந்து)

கல்வித் தகுதி:  குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் அந்தந்த துறையில் முழுநேர டிப்ளோமா படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:  மாதத்திற்கு ரூ .24,000 ஒருங்கிணைந்த உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை  வெற்றிகரமாக முடிந்ததும், ரூ .24,000 என்ற அடிப்படை ஊதியத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.

மேலும், விவரங்களுக்கு 

என்.டி. பி. சி  ஆட்சேர்ப்பு 2020: விண்ணப்பிப்பது எப்படி? 

ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான online.cbexams.com க்கு செல்லவேண்டும்

ஸ்டேப் 2: தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்

ஸ்டேப் 3: பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றவும்

ஸ்டேப் 4: ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jobs at ntpc ntpc recruitment released ntpccareers net

Next Story
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்: 436 அப்ரண்டிஸ் பணியிடங்கள், விண்ணப்பிப்பது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X