Jobs to apply this week eligibility criteria, number of vacancies details here: தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் வங்கிகளில் பல்வேறு வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கல்வி சார்ந்த நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு இந்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவை எந்த பணியிடங்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு
2022 ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு jeemain.nta.nic.in, என்ற இணையதள பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2022
ஆசிரியர் தகுதித் தேர்வு
தமிழகத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு trb.tn.nic.in என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.04.2022.
இந்திய பொருளாதார சேவை
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய பொருளாதார சேவை அல்லது இந்திய புள்ளியியல் சேவை எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https//www.upsconline.nic.in/ என்ற முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 26 -04-2022
TNPSC Exam: இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 தேர்வுகள்; தகுதிகள் என்ன?
வேளாண் விற்பனை அதிகாரி- பரோடா வங்கி
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கி (Bank of Baroda), வேளாண் விற்பனை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 26.04.2022
குரூப் 4 தேர்வு
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 7000க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022. இது குறித்து மேலும் தகவல் அறிய தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
இதையும் படியுங்கள்: BIS நிறுவனத்தில் 276 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CUET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2022 .
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் சிறப்பு அதிகாரி (Specialist Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 145 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pnbindia.in/ வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2022
புலனாய்வு அதிகாரி
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுப் பணியகத்தில் உதவி புலனாய்வு அதிகாரிகளுக்கான தொழில்நுட்பம் சார்ந்த (Assistant Central Inteligent officer- Grade II/Technical) காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 150. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.05.2022
IB ACIO 2022; உளவுத்துறை வேலைவாய்ப்பு; 150 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
உதவி கமாண்டன்ட்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள 253 உதவி கமாண்டன்ட் பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் 10.05.2022.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.