/tamil-ie/media/media_files/uploads/2019/01/perumal-murugan-4.jpg)
joinindiancoastguard.gov.in
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்புத்துறையின் 4-வது தூணாக திகழ்கிறது கடலோரக் காவல் படை . நாட்டின் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதுடன், கடல் மார்க்கமாக நடக்கக் கூடிய போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது, கடலில் தத்தளிக்கும் கப்பல்கள் மற்றும் மீனவர்களை மீட்பது போன்ற பணிகளில் கடலோரக் காவல்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பணியில் நீங்களும் சேர விருப்பமா? இதோ முழு விபரம்.
இந்தியக் கடலோரக் காவல் படையில், நாவிக் என்ற பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது 18 முதல் 22-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தகுதியானோர் 10-ம் வகுப்பு மதிப்பெண், எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன், மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் நவம்பர் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( >www.joinindiancoastguard.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பான விவரங்களைக் கடலோர காவல்படையின் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
மற்ற விபரங்கள்:
1. விருப்பமுள்ளவர்கள் விண்ணபங்களை வரும் 31.1.19 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
2. விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும்.
3. சம்பளம்: ரூ. 21,700
10 ஆவது மற்றும் 12 ஆவது முடித்தவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.