இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) பாம்பே, ஐ.ஐ.டி.,களில் சேர விரும்பும் மாணவர்களின் முதன்மைத் தேர்வாகத் தொடர்கிறது, JEE-அட்வான்ஸ்டு தகுதிப் பட்டியலில் முதல் 100 விண்ணப்பதாரர்களில் 93 பேர் முதன்மை கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி பாம்பே-யை தங்கள் முதல் தேர்வாகத் தேர்ந்தெடுத்தனர், ஆறு பேர் ஐ.ஐ.டி-டெல்லியைத் தேர்ந்தெடுத்தனர். மற்றும் ஒருவர் ஐ.ஐ.டி-மெட்ராஸ்-ஐ தேர்ந்தெடுத்தார்.
முதல் 100 மாணவர்களில், முதல் சுற்று இட ஒதுக்கீடுகளுக்குப் பிறகு, 69 பேர் இறுதியில் ஐ.ஐ.டி-பாம்பேயில் இடம் பெற்றனர். ஐ.ஐ.டி-டெல்லி சற்று தள்ளி இரண்டாவது இடத்தில் உள்ளது, முதல் 100 பேரில் 28 பேர் இங்கே ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர், அதைத் தொடர்ந்து மூன்று பேர் ஐ.ஐ.டி-மெட்ராஸில் சேருகிறார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது.
இதையும் படியுங்கள்: அக்டோபர் 14 முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இந்த எண்ணிக்கைகள் முந்தைய ஆண்டுகளின் போக்குக்கு ஏற்ப உள்ளன. கடந்த ஆண்டு, முதல் 100 JEE (அட்வான்ஸ்டு) தரவரிசைப் பெற்றவர்களில் 62 பேர் ஐ.ஐ.டி-பாம்பேயில் நுழைந்தனர், இது 2020 இல் 58 ஆக இருந்தது.
கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என்பது முதல் 100 பேரில் பெரும் தேர்வாக உள்ளது, அவர்களில் 99 பேர் கணினி அறிவியலைத் தேர்வு செய்துள்ளனர். ஐ.ஐ.டி-பாம்பேயில் இடங்களைப் பெற்ற 69 முதல் தரவரிசைப் பெற்றவர்களில், 68 பேர் கணினி அறிவியலிலும், ஒருவர் பொறியியல் இயற்பியலிலும் (இந்த மாணவர் பொறியியல் இயற்பியலை தனது முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுத்தார்) ஒதுக்கீடு பெற்றனர்.
கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) வெள்ளிக்கிழமை ஆறு ஒதுக்கீடு பட்டியல்களில் முதல் பட்டியலை வெளியிட்டு, கவுன்சிலிங் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
ஐ.ஐ.டி-பாம்பேயில் கற்பிக்கும் மற்றும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2022 இன் நிறுவனத் தலைவரான பேராசிரியர் சூர்யநாராயண டூல்லா, ஐ.ஐ.டி-காரக்பூருக்கு அதிகபட்ச விருப்பத்தேர்வுகள் இருந்தாலும், "அது வழங்கும் அதிக எண்ணிக்கை மற்றும் பல்வேறு படிப்புகள் காரணமாக, சிறந்த 100 JEE- அட்வான்ஸ்டு தரவரிசையாளர்கள் மற்றும் பெரும்பாலும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிக்க விரும்புபவர்களின் மிகவும் விருப்பமான தேர்வாக ஐ.ஐ.டி-பாம்பே உள்ளது," என்று கூறினார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் தவிர, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைக் கண்ட பிற பாடப்பிரிவுகள் ஆகும், என பேராசிரியர் சூர்யநாராயண டூல்லா கூறினார்.
முதல் 100 பேரின் விருப்பத்தேர்வுகள் முதல் 500 ஜே.இ.இ-அட்வான்ஸ்டு தரவரிசையாளர்களிடையேயும் பிரதிபலிக்கின்றன. அவர்களில் 173 பேர் ஐ.ஐ.டி-பாம்பேயில் இடம் பெற்றுள்ளனர், 127 பேர் ஐ.ஐ.டி-டெல்லியில் சேர்ந்துள்ளனர். ஐ.ஐ.டி-மெட்ராஸ், ஐ.ஐ.டி-கான்பூர் மற்றும் ஐ.ஐ.டி-காரக்பூர் ஆகிய அனைத்திலும் முதல் 500 மாணவர்களில் 50க்கும் குறைவானவர்களே இடம்பெற்றுள்ளனர்.
IIT-பம்பாய் சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் மற்றும் JoSAA இன் நிறுவன-உறுப்பினர் பேராசிரியர் தீபாங்கர் சௌத்ரி கருத்துப்படி, இந்த ஆண்டு எண்கள் பல ஆண்டுகளாக சேர்க்கை போக்கு என்ன என்பதை உறுதிப்படுத்துகிறது.
“அதில் நிறைய சக மதிப்பாய்வுகள் மற்றும் பிரபலமான போக்குகளின் அடிப்படையில் இருந்தாலும், ஐ.ஐ.டி-பாம்பே இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நிறுவனங்களில் ஒன்றாகும். மும்பை நிதி தலைநகரமாக இருப்பதால், அனைத்து நிறுவனங்களும் இங்கு முன்னிலையில் உள்ளன. இது மாணவர்களுக்கு அதிக தொழில்துறை வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கிறது, இது பொறியியல் அறிவைப் பயன்படுத்துவதால் கைக்கு வரும். இது தவிர, எங்களின் பாடநெறி தாண்டிய செயல்பாடுகளும் மாணவர்களுக்கு சிறந்த தளமாக அமைகிறது,'' என்று தீபாங்கர் சௌத்ரி கூறினார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் உயர்தர ரேங்க் பெற்றவர்களிடையே பெரும் தேர்வாக இருப்பது குறித்து, ஐ.ஐ.டி-பம்பாய் இயக்குநர் பேராசிரியர் சுபாசிஸ் சௌதுரி, இது இளைஞர்களிடையே "விரைவான ரிசல்ட் கிடைக்கும் பாடப்பிரிவாக" பார்க்கப்படுகிறது என்றார்.
“இந்தத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன… வேலைகள் மற்றும் பிற வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. தொழில்முனைவோர் விஷயத்திலும், இந்த துறையில் முதலீட்டுக் காலம் மிகவும் சிறியது. இந்த தலைமுறையினருக்கு அவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியும், அவர்கள் அதை விரைவாக விரும்புகிறார்கள்,” என்று சுபாசிஸ் சௌத்ரி கூறினார்.
ஆகஸ்டு 28 அன்று நடைபெற்ற ஜே.இ.இ (அட்வான்ஸ்டு) தேர்வில் மொத்தம் 1,55,538 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 40,712 பேர் தகுதி பெற்றனர், அவர்களில் 6,516 பேர் பெண்கள். செப்டம்பர் 11 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) வெள்ளிக்கிழமை ஆறு சுற்றுகளில் முதல் இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டது. JoSAA வின் கூற்றுப்படி, இந்த ஆண்டு, 23 ஐ.ஐ.டி.,களில் 16,598 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, இதில் பெண்களுக்கான 1,567 சூப்பர்நியூமரரி இடங்கள் அடங்கும்.
" JoSAA மூலம் இந்த ஆண்டு மொத்தம் 2,14,067 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீடு செயல்முறைக்கு பதிவு செய்துள்ளனர், அவர்களில் 1,95,924 மாணவர்கள் பங்கேற்கும் நிறுவனங்களில் உள்ள இடங்களுக்கான தேர்வுகளை நிரப்பியுள்ளனர்" என்று பேராசிரியர் சூரியநாராயண டூல்லா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.