எஸ்.எஸ்.சி ஜே.இ 2019 அறிவிப்பு: மத்தியப் பணியாளர் தேர்வாணையம் என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.சி ஜூனியர் இன்ஜினியர் (ஜே.இ) ஆட்சேர்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த மாதம் ஆகஸ்ட் 13 தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 12 மாலை 05 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
ஜூனியர் இன்ஜினியர் - மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், Quantity Surveying & Contract மற்றும் சிவில் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1,601 பதிவுகள் நிரப்பப்பட உள்ளது .
இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும், எஸ்.எஸ்.சி ஜே.இ தேர்வுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கல்வி தகுதி:
ஜூனியர் இன்ஜினியர் (சிவில் / எலக்ட்ரிக்கல்): இந்த பணிகளுக்கு, தேர்வர்கள் மூன்று ஆண்டு டிப்ளோமா அல்லது அதற்கு இணையான சிவில் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் இன்ஜினியர் (Quantity Surveying & Contract): இந்த பணிகளுக்கு, தேர்வர்கள் சிவில் இன்ஜினியரிங்கில் 3 ஆண்டு டிப்ளோமா வைத்திருக்க வேண்டும் அல்லது institute of Surveyors நடத்தும் Building and Quantity Surveying Sub Divisional-II என்ற இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
கணினி அடிப்படையிலான அப்ஜெக்டிவ் வகைகள் (100 மதிப்பெண்கள்) மற்றும் வழக்கமான எழுத்துத் தேர்வு (300 மதிப்பெண்கள்) மூலம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
சம்பள மேட்ரிக்ஸ் நிலை -6 (ரூ .35400- 1,12,400)
விண்ணப்ப கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி வேட்பாளர்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் ரூ-100. பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ பிஹெச்/முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் இல்லை.