ஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கவில்லை.சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச்-17ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும், அங்கன்வாடி மையங்களும் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காலத்தில் பல செயல்பாடுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்திருந்தாலும், கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.
Advertisment
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன்," இந்த ஊரடங்கு காலத்தில் சிறப்பு ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. “எந்தப் பள்ளியும் இதை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"என்ற பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளையும் சுற்றறிக்கையில் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இருப்பினும், சில நிமிடங்களில், அமைச்சர் ஊடகங்களை அழைத்து , "இந்தத் தடை ஆன்லைன் வகுப்புகளைப் பற்றியதில்லை என்றும், ஆன்லைன் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.
முன்னதாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதனை மீறி யாராவது கட்டணம் வசூல் செய்வதாக அரசின் கவனத்திற்கு வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
மேலும், கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil