ரூ.3 லட்சம் வரை கடன்; ரூ.50,000 மானியம்... கலைஞர் கைவினைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க திண்டுக்கல் ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டத்தில் தகுதியுள்ள கைவினைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டத்தில் தகுதியுள்ள கைவினைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
How to apply KKT scheme

ரூ.3 லட்சம் வரை கடன்; ரூ.50,000 மானியம்... 'கலைஞர் கைவினைத் திட்டம்' விண்ணப்பிக்கலாம்! - திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் "கலைஞர் கைவினைத் திட்டம்" திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள கைவினைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

Advertisment

திட்டத்தின் நோக்கம் மற்றும் சலுகைகள்:

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில், கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவியும் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 50,000/- வரை 25% மானியத்துடன், ரூ. 3,00,000/- வரை வங்கி கடன் உதவியும், 5% வட்டி மானியமும் வழங்கப்படும். புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் கடனுதவி வழங்கப்படுகிறது.

தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். தச்சு, பானை செய்தல், கட்டட வேலைகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், நகை செய்தல், தையல் வேலை, கூடை பின்னுதல், கயிறு, மண் பாண்டங்கள், பொம்மை தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், மூங்கில், பிரம்பு, சணல் வேலைப்பாடுகள் உள்ளிட்ட 25 வகையான கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கைவினைஞர்கள் www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Advertisment
Advertisements

மேலும் விவரங்களுக்கு:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைவினைஞர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திட்டம் குறித்த மேலான தகவல்களைப் பெற, பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண். 0451-2904215, 8925533943 ஆகிய எண்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: