Advertisment

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலை வாய்ப்பு; 2 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2023/12/2023120469.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2023/12/2023120471.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment