Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 22 காலியிடங்கள்; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

tn govt jobs

கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்ட நலச் சங்கம் மூலமாக தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: இந்து சமய அறநிலையத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

Urban Health Manager/ Sector Health Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc Nursing படித்திருக்க வேண்டும். அல்லது B.Sc Nursing மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 25,000

Auxiliary Nurse Midwife (ANM)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 14,000

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BPT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,000

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

Pain and Palliative Care Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

Audiometrician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Hearing, Language and Speech படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 17,250

Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Training Young Deaf and Hearing Handicapped படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 17,000

பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

Operation Theatre Assistant (Trauma Care)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : OT Technician course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 11,200

நுண் கதிர்வீச்சாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,300

Dental Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பல் மருத்துவ சுகாதாரத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,800

பல் மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 34,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2022/12/2022122758.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பெருங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி – 606213

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2022/12/2022122741.pdf மற்றும் https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2022/12/2022122758-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment