2017-18 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையமாக கல்வித் தொலைக்காட்சி ஆகஸ்ட் 27 - ம் தேதி தொடங்கப் பட்டது. இதுவரை எந்த கல்வித் துறையும் தொலைக் காட்சி சேனல்களை இயக்கியது கிடையாது. எனவே, இந்தியாவிலே இது முதல் முறை என்பதும் குறிப்பிடத் தக்கது
இக்கல்வித் தொலைக்காட்சி நிலையம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-வது தளத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு, பாடத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகள், NEET, JEE போன்ற போட்டித் தேர்வு தொடர்பான நிகழ்ச்சிகள், மனிதநேயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற விழுப்புணர்வு நிகழ்சிகளும் இக்கல்வித் தொலைகாட்சியில் இடைவிடாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்படுகின்றன.
இந்த கல்வி தொலைக்காட்சி சேனல் அண்ட்ராய்டு மற்றும் ஐ ஓஎஸ் இயங்குதளங்களில் பார்க்க கிடைக்கும். கல்வி தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும். மேலும், பள்ளிகளில் கேபிள் இணைப்பை அமைத்து தொலைக் காட்சி பெட்டியிலும் இந்நிகழ்சிகளை அந்தந்த பள்ளிகளில் காண்பிக்கவும் பள்ளிக் கல்வி துறையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
சில குறிப்பிட்ட பதிவு செய்யப் பட்ட வீடியோக்களை யூடியூப் பில் கண்டுகளிக்கலாம்.