/indian-express-tamil/media/media_files/jQ7mAUPo78ZkSgWTrWQF.jpg)
சென்னையில் நடைபெறவுள்ள கட்டணமில்லா மொழிபெயர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ”தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது.
ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் திரு. ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார்.
இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.” இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், பயிற்சிக்கு கட்டணம் எதுவும் கிடையாது என்றும் கமல் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.