/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஐ.டி நிர்வாகி பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஐ.டி நிர்வாகி (IT - Admin)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Computer Science or Computer Engineering படித்திருக்க வேண்டும். மேலும் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2025/08/17558676914450.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
முகவரி: District Social Welfare Officer, O/o District Social Welfare Office, Old DRDA Building, Collectorate Campus, Kanchipuram – 631 501
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.