தமிழ் நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் ஒரு முதன்மையான நிறுவனமான, சிஎஸ்ஐஆர் - மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர் -சிஇசிஆர்ஐ), காரைக்குடி, பலதரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இந்திய விண்வெளி நிறுவனத்தில் 273 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்த நிறுவனத்தில் திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப சிறந்த கல்வியறிவு கொண்ட ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 19 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Project Associate – I
காலியிடங்களின் எண்ணிக்கை – 10
கல்வித் தகுதி: M.Sc. in Chemistry/ Physics or B.Tech. in Biotechnology படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000 – 31,000
Project Associate –II
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி: M.Sc. in Chemistry படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 28,000
Project Associate –I
காலியிடங்களின் எண்ணிக்கை – 3
கல்வித் தகுதி: B.E / B.Tech. in EEE / ECE/ Chemical Engineering / Chemical & Electrochemical Engineering/ Civil Engineering
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000 – 31,000
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை – 3
கல்வித் தகுதி: B.Sc. in Chemistry/ Electronics or Diploma in EEE / ECE/ Mechanical
வயதுத் தகுதி : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
Project Co-ordinator – I
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி: Ph.D. in Metallurgical Engineering / Metallurgical and Materials Science Engineering
சம்பளம்: ரூ. 60,000
வயது தளர்வு: அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் அக்டோபர் 18 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம்: CSIR - CECRI, COLLEGE ROAD, KARAIKUDI.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-10-2022_AdvtCopy.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.