தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தின் சென்னை அலகில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர், முதுநிலை திட்ட உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 7 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Senior Project Associate
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Ph.D in Chemistry அல்லது M.Sc in Chemistry/B.E/B.Tech in Mechanical/Chemical Engineering அல்லது Ph.D in Metallurgical and Materials Engineering அல்லது M.E/M.Tech Metallurgical and Materials படித்திருக்க வேண்டும். மேலும் 2 முதல் 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 42,000
Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.Sc in Nanoscience and Nanotechnology/ Materials Science/ Chemistry/ B.E/B.Tech in Biotechnology/Biomedical Sciences/Chemical Engineering/ Chemical and Electrochemical Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,000 + HRA
Project Associate – I
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: M.Sc in Chemistry/ B.E/ B.Tech in Electrical/ Electronics/ Electronics and Communication Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000 - 31,000 + HRA
வயது தளர்வு: அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் 08.01.2023 அன்று நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம்: Director, CSIR-CECRI, Karaikudi
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.cecri.res.in/Opportunities.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-13-2023_AdvtCopy.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“